தோனி இந்த ஐபிஎல் மேட்ச்ல இதை செய்ய மாட்டார்.. ஜடேஜாவும் அதுக்கு சரிப்பட மாட்டார் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
42
Dhoni

இந்த ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசன் தொடரில் தோனி ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி ஒரு குறிப்பிட்ட விஷயத்தை செய்ய மாட்டார் என்றும், சிஎஸ்கே அணிக்கு பேட்டிங் யூனிட்டில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்றும் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு ருத்ராஜை புதிய கேப்டனாக கொண்டு வந்தார். அவர் கேப்டன் பொறுப்பில் மோசமாக செயல்படவில்லை என்றாலும் கூட சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு கடந்த ஆண்டு தகுதி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் பிரச்சனை

சிஎஸ்கே அணி மற்ற அணிகள் கண்டுகொள்ளாத வீரர்களை வாங்கி சிறப்பான முறையில் விளையாட வைக்கும் அணி என்கின்ற பொதுவான கருத்து இருக்கிறது. சர்வதேச அனுபவம் கொண்ட 30 வயதான வீரர்களை மற்ற அணிகள் கண்டுகொள்ளாத போது சிஎஸ்கே அவர்களை வாங்கி பெரிய அளவில் சாதிக்கும். இதற்கு அந்த அணியில் பலவீரர்கள் உதாரணமாக இருந்திருக்கிறார்கள்.

அதே சமயத்தில் சிஎஸ்கே அணியில் மேத்யூ ஹைடன், மெக்கலம், டிவேன் ஸ்மித், அல்பி மோர்கல், மைக் ஹசி, சுரேஷ் ரெய்னா போன்று அந்தந்த காலகட்டத்தில் மிகவும் அதிரடியாக விளையாடுவதற்கான பேட்ஸ்மேன் இருந்திருக்கிறார்கள். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அணியில் பிளாஸ்டர் வகையில் தொடர்ந்து அதிரடியில் ஈடுபடும் பேட்மேன் இல்லாதது பிரச்சினையாக இருக்கிறது.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா தெரிவித்த கருத்து

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” சிஎஸ்கே அணியில் தற்போது ஃபயர் பவரை பார்க்க முடியவில்லை. அவர்களின் உச்சியில் கான்வே இருக்கிறார் ஆனால் அவர் மிகவும் அதிரடியாக விளையாட கூடியவர் கிடையாது. அவர் ரன்களை சேகரிக்க கூடியவராகவே இருக்கிறார். மேலும் நீங்கள் கீழே பார்க்கும் பொழுது தோனி அதிரடியாக விளையாட முடியும் ஆனால் அவர் 17 ஓவருக்கு முன்பாக வரப்போவது கிடையாது”

இதையும் படிங்க : ஐபிஎல்தான் டாடி.. 1000 சிக்ஸர்கள்.. டபுள் ஹாட்ரிக்.. 300 ரன் – உத்தப்பா தைரிய கணிப்பு

“எனவே அந்த வேலையை ரவீந்திர ஜடேஜாவால் செய்ய முடியுமா என்றால் அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர் கிடையாது. இப்போதைக்கு நடுவில் இந்த வேலையை செய்ய சிவம் துபே மட்டுமே இருக்கிறார். தற்பொழுது சிஎஸ்கே அணிக்கு இதுதான் பிரச்சினையாக இருக்கும். மேலும் நூர் அகமதை ஆரம்ப கட்டத்திலேயே விளையாட வைக்க வேண்டிய தேவைகள் இருக்காது. ஆடுகளம் மெதுவாக ஆரம்பித்த பிறகு இரண்டாம் கட்டத்தில் அவரை பயன்படுத்தலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -