அவ்ளோ ஈஸியா இருக்காது.. எந்த டீமையும் அந்த 4 பேர் தூக்குவாங்க – ஆப்கன் அணி குறித்து இந்திய முன்னாள் வீரர்

0
277

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் மிக தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆப்கானிஸ்தான் அணி குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது தவிர்க்க முடியாத அணிகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் அணி உள்ளது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற குறுகிய காலகட்டத்திலேயே ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் முன்னணி அணிகளுக்கு எதிராக சிறப்பான வெற்றிகளை பதிவு செய்தது. டி20 உலக கோப்பை தொடரில் அரை இறுதி வரை வந்து தனது இருப்பை பதிவு செய்தது.

இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்க்கலாம். அந்த அணியின் பேட்டிங்கை காட்டிலும் உலகத்தரமான சுழற் பந்துவீச்சை கொண்டு எப்படிப்பட்ட அணிகளையும் வீழ்த்தக்கூடிய திறமை இருப்பதால் அரை இறுதி வரை வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கியமான கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

4 பேர் கிட்ட மாட்டுவீங்க

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நீங்கள் எவ்வளவு தட்டையான ஆடுகளத்தை உருவாக்கினாலும், அவர்களிடம் உள்ள சுழல் தரத்தை கருத்தில் கொண்டு அவர்களது வேலைகளை சிறப்பாக செய்வார்கள். நீங்கள் ரஷித் கானுக்கு எதிராக தப்பித்தால் நூர் அகமதுவுக்கு சிக்கிக் கொள்வீர்கள். நீங்கள் நூருக்கு எதிராக தப்பித்தால் அல்லா ஹசன்ஃபர் உங்களைப் பிடிப்பார். அவரிடம் இருந்து தப்பித்தால் முகமது நபியின் அனுபவத்தில் சிக்கிக் கொள்வீர்கள்.

இதையும் படிங்க:நம் பரம எதிரியை வீழ்த்தனும்.. முழு தேசமும் உங்கள் பின்னால் இருக்கும்.. பாக் அணி வீரர்களுக்கு கட்டளையிட்ட பிரதமர்

அவர்கள் 270 முதல் 280 ரன்கள் வரையிலான போட்டிகளை விரும்புவார்கள். 325 ரன்கள் முதல் 350 ரன்கள் வரையில் குவிக்க கூடிய ஆடுகளங்களை விரும்ப மாட்டார்கள். அவர்களின் அணுகுமுறை 250 ரன்கள் முறை 290 ரன்கள் வரை இருக்கும். அவர்களின் பேட்டிங் அங்கு நன்றாக வேலை செய்யும். ஆனால் உங்களை அதே ரன்கள் குவிக்க அவர்கள் விட மாட்டார்கள். அவர்கள் அரை இறுதிக்கு முன்னேற ஒரு நல்ல வலுவான வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணிக்கும் இதே பிரச்சனை இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா மறைமுகமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -