ஐபிஎல் 2025

அடிச்சு சொல்றேன்.. சிஎஸ்கே செஞ்ச இந்த வேலையை சன்ரைசர்ஸ் ஒருபோதும் செய்யாது.. வாய்ப்பே இல்ல – ஆகாஷ் சோப்ரா பேட்டி

இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் 61வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் விளையாட உள்ளன. லக்னோ அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் செயல்பாடு குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

தோல்வி பாதையில் சன்ரைசர்ஸ்

இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றாக இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு தொடர்ச்சியான போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே வலுவாக திகழும் இந்த அணிக்கு தொடர் தோல்விகள் எதிர்பாராத ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் பேட்டிங் ஆர்டரை மேலும் வலுவாக்கி இருந்த போதும் அந்த அணியால் தொடர்ச்சியான வெற்றிகளை பெற முடியவில்லை. இந்த சூழ்நிலையில் அடுத்த வருடம் சன்ரைசர்ஸ் அணியில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா கருத்து

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா விரிவாக பேசும் போது “சன் ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை சுவாரசியமான அணிகளில் ஒன்றாகும். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அந்த அணி பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு ராஜஸ்தான், சென்னை அணியை போல சன்ரைசர்ஸ் அணியில் முக்கிய மாற்றங்கள் நிகழுமா? என்று கேட்டால் அதற்கு பெரிதாக வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகிறது. இந்த அணியில் பெரிதாக பலவீனங்கள் என்று எதுவும் இல்லை. பேட்டிங் வரிசையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என நினைத்தால் யாரை விட்டு விடுவீர்கள்?

இதையும் படிங்க:சாய் சுதர்ஷன் கிடையாது.. அடுத்த சுரேஷ் ரெய்னா இந்த பையன்தான்.. இன்னிங்ஸ் கண்ட்ரோலர் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

எல்லாரும் எப்படியாவது ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். அடுத்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன். இந்த போட்டியிலும் ரசிகர்கள் விரும்புவதை அவர்கள் வழங்குவதற்கும் அவர்களின் திறனை வெளிப்படுத்தி விளையாடுவதிலும் கவனம் இருக்கும். நீங்கள் ஒரு நல்ல வீரராக இருந்தால் நல்ல வீரராகவே விளையாட வேண்டும். நல்ல வீரராக இருப்பதன் பயன் என்ன? என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by