இந்திய கிரிக்கெட் அணி நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய வீரர் குறித்த சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இந்திய அணி சிறப்பான வெற்றி
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய போது இந்திய அணிக்கு தொடக்கத்தில் மூன்று விக்கட்டுகள் விரைவாக வெளியேற, விராட் கோலியோடு கேஎல் ராகுல் பாட்னர்ஷிப் அமைத்தார். விராட் கோலி 63 பந்துகளை எதிர் கொண்டு 54 ரன்னில் வெளியேற, மறுபுறத்தில் கேஎல் ராகுல் 107 பந்துகளை எதிர்கொண்டு 66 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி 240 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.
இந்த சூழ்நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு கேஎல் ராகுலின் மெதுவான ஆட்டமே காரணமாக அமைந்தது என்று விமர்சனம் செய்யப்பட்டது. அது ஒருபுறம் இருக்க, நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் வந்த கேஎல் ராகுல் 32 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 42 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட நபர்
இந்த சூழ்நிலையில் இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும்போது “கேஎல் ராகுல் வெற்றி ரன்களை குவிக்கும்போது நான் பாக்கியமாக உணர்கிறேன். நான் அங்கு இருந்தது மகிழ்ச்சியாக உணர்கிறேன் கே.எல். ராகுலுக்காக நான் இப்போது மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்பு கேஎல் ராகுல் ட்ரோல் செய்யப்பட்டார். அவர் என் நண்பர் அல்ல, இருந்தாலும் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் மிக வெறுக்கப்பட்ட நபராக இருந்தார்.
இதையும் படிங்க:விராட் கோலியின் மேல் கோபப்பட்டது ஏன்.. களத்தில் அவரிடம் சொன்னது என்ன? – கேஎல்.ராகுல் வெளியிட்ட தகவல்
அவரை விட அன்று யாரும் ட்ரோல் செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். விராட் கோலியும் மெதுவாக விளையாடினார் என்று ட்ரோல் செய்யப்பட்டார். ஆனால் கேஎல் ராகுல் அளவுக்கு அவர் விமர்சனம் செய்யப்படவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் 12வது ஓவரில் அவுட் ஆனார். அதற்கு முன்பு ஏற்கனவே மூன்று பேர் ஆட்டம் இழந்து விட்டார்கள். அப்போது அந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் ஆட்டத்தை இன்னும் ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டி இருந்தது. சூரியகுமார் யாதவ் ரன்கள் எடுக்க அங்கே இருந்தார் ஆனால் எதுவும் சரி இல்லை” என்று பேசி இருக்கிறார்.