விராட் கருண் நாயருக்கு செஞ்ச அதை.. ரோகித் சர்பராஸ் கானுக்கு செய்யவே கூடாது – ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

0
198
Akash

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

நியூசிலாந்து ராணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 150 ரன்கள் குவித்தார். அதே சமயத்தில் கேஎல்.ராகுல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிக மோசமாக விளையாடிய விக்கெட்டை பறி கொடுத்திருந்தார்.

- Advertisement -

முச்சதம் அடித்தும் வாய்ப்பில்லை

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வீரேந்திர சேவாக்கு பிறகு முச்சதம் அடித்த வீரராக கருண் நாயர் இருக்கிறார். விராட் கோலி தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடித்திருந்தார். அந்தப் போட்டியில் அவர் ரகானே விளையாடாததால் வாய்ப்பு பெற்று இருந்தார்.

இந்த நிலையில் அடுத்த போட்டிக்கு ரகானே திரும்பியதும் முச்சதம் அடித்திருந்த கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது அப்போது பெரிய விவாதங்களை கிளப்பி இருந்தது. பிறகு கிடைத்த சில வாய்ப்புகளில் அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. அத்தோடு அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டது.

- Advertisement -

சர்பராஸ் கான் விளையாட வேண்டும் விளையாடுவார்

இதுகுறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” முன்பு இந்திய கிரிக்கெட்டில் கருண் நாயர் முச்சதம் அடித்த பிறகு ரகானே திரும்பி வந்த காரணத்தினால் அவரை அணியில் வாய்ப்பு கொடுக்காமல் நீக்கினார்கள். இது அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது போல் அமைந்தது. இவர்கள் அதே வழியில் செல்ல நினைத்தால் கேஎல்.ராகுல் விளையாடலாம்”

இதையும் படிங்க : ரோகித் கேப்டனா அஸ்வின் வரை நிறைய தப்பு செஞ்சிட்டார்.. எனக்கு பாக்கவே ஆச்சரியமா இருந்தது – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

“இருந்த போதும் அவர்கள் செய்தது போல ரோகித் செய்ய மாட்டார் என்று நான் நினைக்கிறேன். கேஎல்.ராகுல் இடத்தில் சர்பராஸ் கான் விளையாடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது. கேஎல் ராகுல் பேட்டிங் செய்த விதம் மற்றும் அவர் ஆட்டம் இழந்த விதம், அவர் அடுத்த வாய்ப்பை பெறுவார் என்று தோன்றவில்லை. மேலும் இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானது அட்மாஸ்பியர். எனவே இதற்காகவே சர்ப்ராஸ்கான் விளையாடுவார் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -