சாம்சன் ரசிகர்களை தூண்டி விட விரும்பல.. ஆனா இது இந்திய டி20 வரலாற்றில் முதல் முறை – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
172
Aakash

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் ஒரே முறையில் ஆட்டம் இழந்து வரும் சஞ்சு சாம்சன் ரசிகர்களை தூண்டி விட விரும்பவில்லை என ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 போட்டிகள் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் இந்திய அணி மூன்று போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியும் இருக்கிறது. இந்த நிலையில் நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து சஞ்சு சாம்சன் ஷார்ட் பந்துக்கு ஆட்டம் இழந்து வருகிறார்.

- Advertisement -

ரசிகர்களை தூண்டி விட விரும்பல

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” இந்தியா டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்தது. வழக்கம் போல் சஞ்சு சாம்சன் அதே முறையில் ஆட்டம் இழந்தார். இருந்தபோதிலும் கூட நான் விமர்சனம் என்ற பெயரில் சஞ்சு சாம்சன் ரசிகர்களை தூண்டிவிட விரும்பவில்லை. ஆனால் அவர் ஒரே முறையில் நான்கு முறை ஆட்டம் இழந்து இருக்கிறார் என்பது மட்டும் உண்மை”

“அவர் இந்த முறை ஷாகிப் மக்மத்துக்கு ஆட்டம் இழந்து இருக்கிறார். மீண்டும் அவர் ஷார்ட் பந்துக்கு டீப்பில் ஒரு பீல்டரை கண்டுபிடித்து ஆட்டம் இழந்து இருக்கிறார். இதுவரையில் சோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக மூன்று முறை இதே போல் வெளியேறினார். இப்போது புதிதாக வந்த ஒரு பந்துவீச்சாளருக்கு வெளியேறியிருக்கிறார்”

- Advertisement -

திலக் வர்மா மீது விமர்சனம் இல்லை

“சஞ்சு சாம்சன் ஆட்டம் இழந்த அடுத்த பந்து உள்ளே வந்த திலக் வர்மாவும் அதிரடியாக விளையாட சென்று ஆட்டம் இழந்தார். இப்படித்தான் விளையாட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து உள்ளே வரும் காலகட்டமாக இது இருக்கிறது. எனவே அவர் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க சென்று ஆட்டம் இழந்து விட்டார். அவர் ஏற்கனவே நிறைய ரன்கள் எடுத்திருப்பதால் அவர் மீது தற்போது விமர்சனம் இல்லை”

இதையும் படிங்க : ஹர்ஷித் ராணா விவகாரம் பைத்தியக்காரத்தனம்.. ஐபிஎல்ல அப்படி இருந்தவருக்கு இது அதிகம் – அலைஸ்டர் குக் விமர்சனம்

“இதுதான் இவர்கள் விளையாட நினைக்கும் விதம் என்றால் இது குறித்து நாம் விமர்சனம் செய்வதற்கு எதுவும் கிடையாது. அடுத்து சூரியகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். விசா தாமதமாகி தாமதமாக வந்த ஷாகிப் மக்மத் ஒரே ஓவரில் ரன் ஏதும் தராமல் மூன்று விக்கெட் கைப்பற்றினார். இந்திய டி20 வரலாற்றில் இப்படி நடந்தது இதுவே முதல் முறை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -