விராட் ரோகித் 2027 உலக கோப்பை ஆடுவார்களா?.. அகர்கர் தந்த வினோத பதில்.. ரசிகர்கள் கோபம்

0
57
Agarkar

2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவார்களா? என்பது குறித்து இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பதிலளித்திருக்கிறார்.

தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நாளை மறுநாள் தொடங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறார்கள். ஆனால் மேற்கொண்டு 2027 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்களா? என்பது சந்தேகமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இருவரின் நிலை என்ன?

இந்த நிலையில் இந்த இருவரும் 2027 உலக கோப்பை தொடரில் ஆடுவார்களா என்பது குறித்தான கேள்விக்கு இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்பதாக பதில் அளித்து இருக்கிறார். மேலும் அவர்கள் தேர்வுக் குழு சில திட்டங்கள் வைத்திருப்பதாகவும் பேசி இருப்பது இந்திய ரசிகர்களை கோபப்பட வைத்திருக்கிறது.

இதுகுறித்து அஜித் அகர்கர் கூறும் பொழுது ” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிகச் சிறந்த வீரர்களாக இருந்த வருகிறார்கள். அதே சமயத்தில் ஒட்டுமொத்தமாக அணி என்ன செய்ய விரும்புகிறது என்பதில் நாங்கள் கவனம் செலுத்த விரும்புவதால், இவர்கள் தொடர்ந்து ஆடுவார்களா? என்பதை குறித்து பேசுவதற்கான இடமாக இது இருக்காது. ஏனென்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலைமை என்னவாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது. இவர்களுக்கு மட்டுமல்ல இளைய வீரர்களுக்கும் இதுவேதான் நிலைமை”

- Advertisement -

இது முட்டாள்தனமாக இருக்கும்

“மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரையும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சோதனைக்கு உட்படுத்த முடியாது. ஒருவர் 50-க்கும் மேற்பட்ட ரன் சராசரி வைத்திருக்கிறார், இன்னொருவர் அதற்கு பக்கத்தில் இருக்கிறார். எனவே அவர்களை ஒவ்வொரு போட்டியையும் வைத்து மதிப்பிடுவது முட்டாள்தனமானது”

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டியை விட ஒருநாள் போட்டி கேப்டன்ஷி கடினமாக இருக்காது.. ஆனால் கில், இதை கற்றுக்கனும்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

“இந்த தொடரில் இருவரும் ரன்கள் எடுக்க வில்லை என்றாலும் அல்லது 300 ரன்கள் எடுத்தாலும் கூட அருகில் இருக்க மாட்டார்கள் அல்லது இருப்பார்கள் என்பது உறுதி கிடையாது. இன்னும் நீண்ட தூரம் இருப்பதால் அணி எவ்வாறு செட் ஆகிறது என்று பார்ப்போம். மேலும் எங்களிடம் சில யோசனைகள் இருக்கிறது. நாங்கள் முன்னேறி செல்லும் பொழுது அணி எப்படி முன்னேறுகிறது என்பதை பார்க்க முடிவு செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -