இந்திய கிரிக்கெட்

இப்ப டீம்ல இருக்கும் இந்த பிளேயர்.. 2027 உலக கோப்பையில் இருக்க மாட்டார்னு தோணுது – ரகானே விளக்கம்

​இந்திய ஓடிஐ அணியில் அனுபவமிக்க ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 2027 உலகக்கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைப்பது நிச்சயம் இல்லை என இந்திய முன்னாள் வீரர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு தனது இடத்தை அவர் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

​இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டராக ஜடேஜா நிச்சயம் விளையாடுவார். ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு அணி நிர்வாகம் எந்த மாதிரியான காம்பினேஷனுடன் களமிறங்கப் போகிறது என்பதை பொறுத்தே அவரது வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.

​மேலும் தென்னாப்பிரிக்கா போன்ற வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான சூழலில் எத்தனை ஃபாஸ்ட் பௌலர்கள் மற்றும் ஃபாஸ்ட் பௌலிங் ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதும் மிகவும் முக்கியமானது. எனவே இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் அவருக்கு தகுதியை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

​இதுகுறித்து அஜிங்கிய ரஹானே பேசும்போது, “ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஜடேஜாவும் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் ஆவார். அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அனைத்து சூழல்களிலும் விளையாடிய அனுபவம் இருப்பதால் அவருக்கு இது கடினமாக இருக்காது. இந்திய சூழலில் நிச்சயம் விளையாடுவார், ஆனால் உலகக்கோப்பை விஷயத்தில் எனக்கு உறுதியாக தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர், “அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பதால் உலகக்கோப்பைக்கான திட்டத்தில் அவர் இருக்கிறார் என்பது தெரிகிறது. எனவே இங்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பேட்டிங் அல்லது பௌலிங் என இரண்டிலும் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்து உலகக்கோப்பைக்கான தனது இடத்தை அவர் பலப்படுத்த வேண்டும்” என்று கூறி முடித்திருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts