இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்ட் கூட முதல் அறிமுகமே மோசம்.. உதவிய கூட ஏற்காம.. சொன்ன பதில் ஆச்சரியம் – அஜய் ஜடேஜா பேச்சு

ரிஷப் பண்ட் உடனான தனது முதல் சந்திப்பு எவ்வளவு மோசமானதாக அமைந்தது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜய் ஜடேஜா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

அஜய் ஜடேஜா 2015 ஆம் ஆண்டு காலத்தில் டெல்லி மாநில அணிக்கு சில மாதங்கள் மட்டுமே பயிற்சியாளராக இருந்தார். அப்பொழுது ரிஷப் பண்ட் டெல்லி மாநில அணிக்காக அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் நடந்த சில முக்கியமான விஷயங்கள் பற்றி மிகவும் வெளிப்படையாக அஜய் ஜடேஜா பேசியிருக்கிறார்.

ரிஷப் பண்ட் ரஞ்சி அறிமுகம்

ரிஷப் பண்ட் 2015 ஆம் ஆண்டு ரஞ்சி தொடருக்கு டெல்லி மாநில அணியில் முதலில் தேர்வாகவில்லை. பிறகு தொடரின் மத்தியில் அவருக்கு ரஞ்சி தொடரில் டெல்லி அணிக்கு அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர் 2016 ஆம் ஆண்டில் ரஞ்சி தொடரில் முச்சதம் அடித்தது இல்லாமல் 48 பந்தில் அதிரடி சதமும் அடித்து சாதனை படைத்தார்.

இந்த நேரத்தில் டெல்லி மாநில அணியின் கேப்டனாக 2015 ஆம் ஆண்டு கவுதம் கம்பீர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில்தான் அந்த ஆண்டு ரிஷப் பண்ட்டை டெல்லி மாநில அணிக்கு தேர்வு செய்யாமல் தடுப்பதற்கு பயிற்சியாளரான தன்னுடன் அப்போதைய டெல்லி மாநில கேப்டன் மற்றும் டெல்லி தேர்வாளர்கள் நிறைய வாதிட்டார்கள் என அதிர்ச்சியான தகவலை அதிக ஜடேஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

தொடர்ந்து வாக்குவாதம் செய்தார்கள்

இதுகுறித்து அஜய் ஜடேஜா பேசும்பொழுது ” நான் சில நாட்கள் டெல்லி மாநில அணியின் பயிற்சியாளராக 2015 ஆம் ஆண்டில் இருந்தேன். பிறகு நான் அப்பொழுதே அங்கிருந்து பதவியை ராஜினாமாவும் செய்து விட்டேன். அப்போது டெல்லி அணியின் கேப்டன் தேர்வாளர்களும் அணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பது குறித்து என்னுடன் வாக்குவாதம் செய்தார்கள். மேலும் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படவில்லை”

இதையும் படிங்க : எனக்காக ரிஷப் பண்ட் கிட்ட கம்பீர் இத சொல்லணும்.. புரிஞ்சுக்கோ நீ வேற லெவல் ஆளுபா – அஸ்வின் விருப்பம்

” ரிஷப் பண்ட் டெல்லி ரஞ்சி அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் அதற்கான பயிற்சி முகாமில் தொடர்ந்து கலந்து கொள்ளுமாறு நான் ரிஷப் பண்ட் இடம் சொன்னேன். அது அவருக்கு எதிர்காலத்தில் உதவியாக இருக்கும் என்று கூறி அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அப்பொழுது அவர் என்னிடம் ‘அண்ணா என்னை இப்படியே இருக்க விடுங்கள். ஏதாவது தேவை ஏற்பட்டால் நான் வீட்டில் இருந்து உங்களை அழைக்கிறேன்’ என்று கூறி ஆச்சரியப்படுத்தி விட்டார்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts