முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றும் இன்றைய போட்டியில் ஏன் அவர் அணியில் இடம் பெறவில்லை – கேள்வி எழுப்பியுள்ள அஜய் ஜடேஜா

0
51

இந்திய மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து இன்று 2-வது மற்றும் கடைசி போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது.

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாவது போட்டியில் ருத்ராஜ் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடிக் கொண்டிருக்கிறார். அதேபோல ஆவேஷ் கானுக்கு பதிலாக ஹர்ஷால் பட்டேலும், சஹாலுக்கு பதிலாக ரவி பிஷ்னோயும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றும் இரண்டாவது போட்டியில் ஏன் இடம் இல்லை

முதல் போட்டியில் மூன்று ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி 11 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆட்டநாயகன் விருதை சஹால் வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று அவர் அணியில் இடம் பெறவில்லை. இது சம்பந்தமாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

உலக கோப்பை டி20 தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது இந்திய அணியை நாம் தயார்படுத்தி ஆக வேண்டும். இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் சற்று கவனம் வேண்டும்.

- Advertisement -

முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்ற சஹால் இன்று ஏன் அணியில் இடம்பெறவில்லை. கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் சஹால் சென்று, முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற நான் இன்று ஏன் வெளியே அமர்த்தப்பட்டு இருக்கிறேன் என்று கேட்டால் எப்படி இருக்கும்.

நல்ல டச்சில் இருக்கும் அவர் இன்றைய போட்டியில் விளையாடியிருந்திருக்க வேண்டும். தொடர்ந்து நன்றாக விளையாடும் பட்சத்தில் உலகக்கோப்பை டி 20 தொடரில் அவரது ஆட்டம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். இதுபோன்ற அவசர முடிவுகள் இனி பார்த்து சற்று நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும் என்று அஜய் ஜடேஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Advertisement -