“தப்ப ஒத்துக்கோங்க.. முக்கிய முடிவை எடுங்க.. உலக கோப்பை கிடைக்காது!” – கவாஸ்கர் காரசாரமான பேச்சு!

0
4322
Gavaskar

இந்திய கிரிக்கெட் தற்காலத்தில் மிகவும் செழிப்பாக இருக்கிறது. இளம் திறமையான வீரர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவின் உள் கிரிக்கெட் கட்டமைப்பு மிக வலிமையாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஆனால் அதே சமயத்தில் இந்தியா ஒரு ஐசிசி தொடரை வென்று ஏறக்குறைய 10 வருடங்கள் ஆகிறது. ஒரு உலகக் கோப்பை தொடரை வென்று 12 வருடங்கள் ஆகிறது. இறுதியாக டி20 உலகக் கோப்பை தொடரை வென்று 16 வருடங்கள் ஆகிறது.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடங்கப்பட்டு இந்தியா உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி நாடாக உருவாகியிருக்கிறது. இப்படி எல்லாம் இருந்தும் கூட உலகக் கோப்பை எதுவும் பக்கத்தில் வெல்லாமல் இருப்பது மிகவும் விமர்சனத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது.

குறிப்பாக இந்தியா 16 ஆண்டுகள் வெற்றிகரமாக டி20 ஐபிஎல் தொடரை நடத்தி விட்டது. மேலும் உலகத்திலேயே இதுதான் வணிகத்திலும், தரத்திலும் முதன்மையான இடத்தில் இருக்கிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஐசிசி தொடர்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதேநிலை தொடர்ந்து நீடித்து வருவதால் இந்தியா உலக கிரிக்கெட்டின் அதிகார மையமாக இருப்பதை மட்டும் வைத்து என்ன செய்வது? என்கின்ற சலிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எழ ஆரம்பித்து இருக்கிறது. இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயங்கள் நிறைய உருவாகிவிட்டன.

- Advertisement -

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்தியா இனி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இறுதிப்போட்டியில் செய்த சில தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒற்றுமையைக் காட்ட நினைப்பது சரிதான், ஆனால் தவறுகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் முன்னேற்றம் மிக மெதுவாகத்தான் நடக்கும்.

அடுத்த சில வாரங்களில் தேர்வுக்குழுவும் சில முக்கிய வீரர்களும் தனிப்பட்ட முறையில் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். மூத்த வீரர்களும் இளம் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை வைத்து பார்த்தால், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லாதது, பின்னடைவான ஒரு விஷயம்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் தற்பொழுது அது முடிந்து விட்டது. எனவே நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். கடந்த நான்கு உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா மற்ற அணிகளை காட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாதான் இரண்டு முறை உலகக்கோப்பையை வென்று இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!