தற்போது இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்பார்த்த பல வீரர்களின் செயல்பாடு மிகவும் சுமாராக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியின் செயல்பாடுமே மிகச் சுமாராக இருக்கிறது.
இதன் காரணமாக அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் இருந்து சில வீரர்களை, ஐபிஎல் அணி நிர்வாகங்கள் கழட்டி விடுவதற்கான வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்திய மண்ணில் இவர்களது செயல்பாட்டை கணக்கில் வைத்து இந்த முடிவை அணி நிர்வாகங்கள் எடுக்கலாம். மேலும் ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்களை வாங்குவதற்கு முயற்சி செய்யலாம்.
அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உலகக்கோப்பை தொடர் முடிந்து அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களுடைய கழட்டிவிடும் வீரர்கள் மற்றும் பரிமாறிக் கொள்ளும் வீரர்களின் விவரங்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த கட்டுரையில் கழட்டி விட வாய்ப்பு இருக்கும் 5 முக்கிய வீரர்கள் பற்றி பார்ப்போம்.
பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே :
ஐபிஎல் மினி ஏலத்தில் மூன்றாவது அதிக விலை கொடுத்து 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை வாங்கியது. இந்த வருட ஐபிஎல் தொடரிலும் இவரால் நல்ல தாக்கத்தை அணிக்கு தர முடியவில்லை. மேலும் இவரால் பந்து வீச முடியாமல் இருப்பது பின்னடைவாக இருக்கிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் இவரது பேட்டிங் செயல்பாடு படு சுமாராக இருக்கிறது. எனவே புதிய வீரர்களிடம் செல்ல இவரை கழட்டி விட வாய்ப்பு இருக்கிறது.
சாம் கரன் பஞ்சாப் கிங்ஸ் :
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்குப் போன வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியால் கடைசி ஐபிஎல் மினி எழுத்தில் 18.50 கோடிக்கு வாங்கப்பட்டார். இவருக்கு நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆரம்பத்தில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் இவர் மொத்தம் 35 ரன்கள் மட்டும் எடுத்து விக்கெட்டுகள் ஏதும் கைப்பற்றாமல் இருக்கிறார். இவருடைய இடத்தில் ரச்சின் ரவீந்தரா போன்ற ஆல் ரவுண்டரை பஞ்சாப் கிங்ஸ் முயற்சி செய்தால் ஆச்சரியம் இல்லை.
சர்துல் தாக்கூர் கேகேஆர் :
டெல்லி அணியிடம் இருந்து 10 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கைமாற்றப்பட்டவர். பொதுவாக இவர் பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். மேலும் பேட்டிகள் எப்போது நன்றாக விளையாடுவார் என்று அவருக்கே தெரியாது. எனவே பந்துவீச்சு அல்லது பேட்டிங் என எது ஒன்றிலும் வலிமையாக இல்லாத இவரை கொல்கத்தா நிர்வாகம் கழட்டி விட வாய்ப்புகள் மிக அதிகம்.
முஸ்தஃபிஷர் ரஹ்மான் டிசி :
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கோ அல்லது தற்போது உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு இவருடைய தாக்கம் பெரிதாக இல்லை. டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் இவரிடமிருந்து விலக நினைக்கலாம்.
ஷகிப் அல் ஹசன் கேகேஆர் :
நடப்பு உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகளில் 71 ரன்களும் 7 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். இவரை 1.5 கோடி கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் வாங்கி இருக்கிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் வீரராகவும் கேப்டனாகவும் இவர் பங்களாதேஷ் அணைக்கு எந்த ஒரு தாக்கத்தையும் கொடுக்கவில்லை. எனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கழட்டிவிடும் சில வீரர்களில் இவரும் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது!






