என்னதான் ஆச்சு இந்திய அணிக்கு ? கேப்டன் கே.எல்.ராகுலைத் தொடர்ந்து குல்தீப் யாதவும் தென் ஆப்ரிக்கா டி20ஐ தொடரில் இருந்து வெளியேற்றம்

0
132
Kuldeep Yadav and KL Rahul

ஐ.பி.எல் முடிந்திருக்கிற நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்திருக்கிறது தென் ஆப்பிரிக்க அணி. கடந்த வருடத்தின் இறுதியில் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட தென் ஆப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, இரு தொடர்களையும் 1-2, 0-3 என தோற்று வெறுங்கையோடுதான் நாடு திரும்பியது.

இந்தச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் முடிந்ததும் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்து இருந்தார். அடுத்து ஒருநாள் தொடருக்கு தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற கே.எல்.ராகுலின் ஆன்-பீல்ட் கேப்டன்சியும், அணித்தேர்வும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இந்திய அணியும் ஒருநாள் தொடரில் வாஷ்-அவுட் ஆனது!

- Advertisement -

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடர் பழைய படுதோல்விகளுக்குப் பழிதீர்க்கும் தொடராகவே பார்க்கப்பட்டது. இதனால் பல ரிஷாப் பண்ட் முதல் பும்ரா வரை ஓய்வளிக்கப்படலாம் என்ற நிலையில், விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரீட் பும்ரா, மொகம்மத் ஷமி ஆகியோருக்கு மட்டுமே ஓய்வளிக்கப்பட்டது.

ஐ.பி.எல் தொடரின் போது இந்தத் தொடருக்கான இந்திய அணி கே.எல்.ராகுல் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இதில் தினேஷ்கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா மறுவாய்ப்பு பெற, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் முதல் வாய்ப்பை பெற்றார்கள். நல்ல பார்மிலிருக்கும் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு என்ற வகையில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு இருந்தது!

தற்போது இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை டெல்லியில் துவங்க இருக்கும் நிலையில் கேப்டன் கே.எல்.ராகுல் காயத்தால் தொடரைவிட்டு வெளியேறி இருக்கிறார். ரிஷாப் பண்ட் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதில் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக ஸ்பின்னர் குல்தீப் யாதவும் காயத்தால் வெளியேறி இருக்கிறார். இவர்களின் காயம், இவர்களுக்கான மாற்று வீரர்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை!

- Advertisement -