ஜெய்ஸ்வால் அபார சதம்.. ஓரே போட்டியில் எல்லா ரெக்கார்டும் காலி… அறிமுக போட்டியில் சதமடித்து புதிய ரெக்கார்ட்!

0
28540

அறிமுகப் போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கி அபார சதம் அடித்துள்ள ஜெய்ஸ்வால், சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளையும் முறியடித்து புதிய வரலாறு எழுதி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டாமினிக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் இந்திய சுழற்பந்து வீச்சின் தாக்கத்தால் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகள், ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.

இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த இந்த ஜோடி முதல் நாள் முடிவில் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி முடித்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு அறிமுகவீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த 13வது இந்திய வீரர் எனும் சாதனையை படைத்தார். தொடர்ந்து நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால், வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அனாயசமாக இவர் கொண்டு ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

ரோகித்-ஜெய்ஸ்வால் ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தபோது, ஜெய்ஸ்வால் டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார்.இதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.

இதற்கு முன்பு அறிமுக டெஸ்ட் போட்டியில் இதுவரை இரண்டு இந்திய துவக்க வீரர்கள் மட்டுமே சதம் விளாசியுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஷிக்கர் தவான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சதம் அடித்தார். 2018ஆம் ஆண்டு ப்ரிதிவி ஷா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடித்தார். தற்போது ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடித்து.. 3ஆவது வீரராக இருக்கிறார் .