இலங்கை அணிக்கு எதிராக 18 வருட சாதனை முடிந்தது.. 27 வருட பெருமையையாவது காப்பாற்றுவார்களா?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

0
165
Rohit

இந்திய அணி தற்பொழுது ரோகித் சர்மா தலைமையில் இலங்கை அணிக்கு எதிராக அந்த நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் கிடைத்திருக்கும் எதிர்பாராத முடிவுகள் இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் மகத்தான சாதனை ஒன்றை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாத காரணத்தினால் போட்டி டை ஆனது. குறிப்பாக 231 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 241 ரன்கள் துரத்தும் பொழுது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தார்கள். ஆனால் மேற்கொண்டு விளையாடிய வீரர்கள் சரியாக விளையாடாமல் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி வெல்ல வேண்டிய முதல் போட்டியை கோட்டைவிட்ட காரணத்தினால் தற்போது இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. எனவே இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இனி வெல்ல முடியாது என்கின்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

- Advertisement -

2006 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடர் மழையின் காரணமாக ஒரு போட்டி கூட நடைபெறாமல் மூன்று போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு 0-0 என டிராவில் முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்குப் பிறகு இதுவரையில் இந்திய அணி மொத்தம் 11 ஒரு நாள் தொடர்களை அந்த அணிக்கு எதிராக தோற்காமல் வென்று 18 வருடங்களாக சாதனை படைத்து வந்திருக்கிறது. தற்போது இந்தச் சாதனை பரிதாபமாக முடிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : டிஎன்பிஎல் பைனல்.. சென்னை மக்களுக்கு முன்னாடி ஆடுவது எப்பவுமே சந்தோஷம்.. இதான் காரணம் – ராகுல் டிராவிட் பேச்சு

மேலும் இந்திய அணி 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி இடம் இழந்தது இல்லை என்று 27 வருடங்களாக பெருமையை தக்க வைத்திருக்கிறார். இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டும். அப்பொழுதுதான் தொடரை சமன் செய்ய முடியும். தோற்றால் தொடரை இழப்பதோடு, 27 வருடங்களாக இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்ததில்லை என்கின்ற பெருமைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -