உலக கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி 2025.. அறிவிக்கப்பட்ட பலமான ஆப்கானிஸ்தான் அணி.. நட்சத்திர சுழல் பவுலர் நீக்கம்.. முழு விபரம்

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இதற்காக அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட தங்களது அணிகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் அணியும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

இதற்கு முன்பாக நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றியதால் இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரின் அனைத்து அணிகளும் விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலத்தில் சிறந்து வெற்றிகளை பதிவு செய்து வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி தற்போது 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் இதில் செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த இப்ராஹிம் சத்ரான் இந்தத் தொடரின் மூலமாக அணிக்கு திரும்பி இருக்கிறார்.ரஹ்மானுல்லா குர்பாஸ் முதன்மை விக்கெட் கீப்பராகவும் அதிரடியான தொடக்க ஆட்டக்காரராகவும் அணிவகுத்து நிற்கிறார்.அதே நேரத்தில் மிடில் ஆர்டரை ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஷாஹிதி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியை பலப்படுத்துகிறார்கள். முகமது நபி, அஸ்மத்துல்லா ஒமர்சாய் மற்றும் குல்பாடின் நைப் போன்ற ஆல் ரவுண்டர் வீரர்களும் அணியை மேலும் பலம் ஆக்குகின்றனர்.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி

ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரித் மாலிக் மற்றும் நவீத் சத்ரான் போன்ற வீரர்கள் வேகப்பந்து வரிசையில் அணிவகுத்து நிற்கிறார்கள். சுழற்பந்து வீச்சு துறைக்கு ரஷித் கான் தலைமை தாங்கி நிற்கிறார். எனினும் 75 போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகள் வீழ்த்திய முஜீப் உர் ரஹ்மான் இந்தத் தொடருக்கு நீக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து கொண்ட பி பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:370 ரன்.. 4 வீராங்கனைகள் மாஸ் ஆட்டம்.. இந்தியா அயர்லாந்து 2வது ஒருநாள்.. மந்தனா அணி அசத்தல் வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி : ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (c), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, இக்ரம் அலிகில், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது கான், ஃபார்ஹார்ஹான், ஃபார்ஹார்ஹான் குய், ஃபரித் மாலிக், மற்றும் நவீத் சத்ரான்.

- Advertisement -
Published by

Recent Posts