ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதன் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் ஒரே நாளில் ஆப்கானிஸ்தான் அணி 3 சாதனைகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிற நிலையில் முதல் இன்னிங்சில் ஜிம்பாவே அணி 586 ரன்கள் குவித்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஜிம்பாப்வே அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் குவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் ரஹ்மத் மற்றும் கேப்டன் சாகிதி ஆகியோர் நிலைத்து நின்று விளையாட்டினார்கள்.
இந்த இருவரும் மிகப் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 416 பந்துகளை எதிர்கொண்ட ரஹ்மத் 23 பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 231 ரன்கள் குவித்து அபார இரட்டை சதம் அடித்திருக்கிறார். மேலும் அவரோடு பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஷாகிதி 276 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த நிலையில் ஒரே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கு சாதனைகள் படைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் விக்கெட் இழப்பின்றி 300க்கும் மேற்பட்ட ரன்கள் தற்போது ஆப்கானிஸ்தான் அணியால் குவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜோடி 618 பந்துகளை எதிர்கொண்டு 361 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல 2021 ஆம் ஆண்டு அபுதாபியில் இதே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் சாகிதி 200 ரன்கள் குவித்திருக்கிறார். தற்போது ரஹ்மத்ஷா 231 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் இது ஆப்கானிஸ்தான் அணிக்கு இரண்டாவது இரட்டை சதமாக பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க:கோவா அணியில் இருந்து.. நீக்கம் செய்யப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் மகன்.. விஜய் ஹசாரே டிராபி 2024-25.. முழு விபரம்
மேலும் 2004ஆம் ஆண்டில் இலங்கை அணி இதே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இதே மைதானத்தில் சங்ககாரா மற்றும் மார்வின் அட்டப்பட்டு ஆகியோர் 438 ரன்கள் குவித்திருந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் ஜோடி 361 ரன்கள் குவித்து இரண்டாவது அதிகபட்ச ரன்களாக பதிவு செய்திருக்கிறது. மேலும் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாள் முழுக்க ஒரு விக்கெட் கூட விழாதது இதுவே முதல் முறையாகும். ஜிம்பாப்வே அணி நாள் முழுக்க விக்கெட் வீழ்த்தாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.