இந்த ஆண்டு மார்ச் இறுதியில் ஆரம்பித்து மே மாதம் இறுதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 கிரிக்கெட் லீக் ஐபிஎல் தொடர் முடிவுக்கு வருகிறது.
இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.
நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணிக்கு மூன்று சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜனவரி 11-ம் தேதி முதல் இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக பிசிசிஐ தேர்வுக்குழு சில ஆச்சரியமான முடிவுகளுடன் தங்களது அணியை அறிவித்திருக்கின்றன.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் திரும்புகிறார். இது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியும் இந்திய t20 அணிக்கு திரும்புகிறார்.
இந்திய அணியின் மற்றும் ஒரு மூத்த வீரரான கேஎல்.ராகுல் இடம்பெறவில்லை. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் மற்றும் ருதுராஜ் இடம் பெறவில்லை. மேலும் பும்ரா சிராஜ் போன்ற முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களும் இடம் பெறவில்லை.
விக்கெட் கீப்பர்களாக ஜிதேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். இஷான் கிஷான் இடம் பெறவில்லை. மேலும் சுழற் பந்துவீச்சாளர் சாகலுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணி:
ரோஹித் சர்மா (கே), கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (வி.கீ.), சஞ்சு சாம்சன் (வி.கீ.), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார்.