“பாகிஸ்தானை விட ஆப்கானிஸ்தான்தான் நல்லா விளையாடியது.. இதை ஏத்துக்கனும்!” – வாசிம் அக்ரம் வெளிப்படையான பேச்சு!

0
347
Akram

இன்று 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், அரை இறுதியில் தகுதி பெறுவதற்கு அசாத்தியமான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி இருக்கிறது.

மிக முக்கியமாக இன்று இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் பாகிஸ்தான் அணி ஆட்டத்தை வெல்வதற்கு முன்னால் டாசை வெல்ல வேண்டும். இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருக்காது.

- Advertisement -

இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பில் வந்து நிற்பதற்கு மிக முக்கியக் காரணமாக அந்த அணி ஆப்கானிஸ்தான அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததுதான் இருக்கிறது.

சென்னையில் நடைபெற்ற குறிப்பிட்ட குறிப்பிட்ட போட்டியில் 280 ரன்களுக்கு மேல் அடித்தும் கூட, அதை ஆப்கானிஸ்தான் அனாயசமாக துரத்தி வெற்றி பெற்று அசத்தியது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கொடுத்தது. இந்தத் தோல்விதான் பாகிஸ்தானை தற்பொழுது அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேற்றுகிறது என்றும் கூறலாம்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி 9 போட்டிகளில் நான்கு போட்டிகளை வென்று இருக்கிறது. அதில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகளை வென்ற இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என மூன்று பெரிய அணிகளை வென்று இருக்கிறது.

தொடர்ச்சியாக மோசமாக செயல்பட்டு வரும் பங்களாதேஷ் அணியுடன் தோற்காமல் இருந்திருந்தால், மேலும் கையில் இருந்த ஆஸ்திரேலியா ஆட்டத்தை தோற்காமல் இருந்திருந்தால் இன்று அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் இருந்திருக்கும்.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் கூறும் பொழுது “எங்களை விட ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது. துணை கண்டத்தில் தற்பொழுது இந்தியா மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் எங்கள் அணியை எடுத்துக் கொண்டால், நாங்கள் செயல்பட்டதை விட ஆப்கானிஸ்தான் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்!

மேலும் இது குறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் “ஆப்கானிஸ்தான் வீரர்கள் களத்தில் வலுவாக காணப்பட்டார்கள். ஒருவேளை எங்கள் வீரர்கள் அதிக கிரிக்கெட் விளையாடிய காரணத்தினால் சோர்வாக இருந்திருக்கலாம். ஆப்கானிஸ்தான் வீரர்கள் களத்தில் பாகிஸ்தான் வீரர்களை விட சிறப்பாக தோற்றம் அளித்தனர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -