205 ரன்.. செமி பைனலில் இந்திய அணியை வீழ்த்திய ஆப்கான்.. பைனலில் இலங்கை அணி உடன் மோதல்

0
634
Afghanistan

இன்று எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது அரைறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதற்கு முன்பாக நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் வென்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அசத்திய ஆப்கானிஸ்தான் ஓபனர்ஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்கள். இந்த துவக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு வெறும் 87 பந்துகளில் 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு செடியுல்லாஹ் அடால் 52 பந்தில் 83 ரன்கள், ஜுபைத் அக்பரி 41 பந்தில் 64 ரன்கள், கரீம் ஜனத் 20 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. ஆனாலும் இந்திய அணியின் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ராசிக் சலாம் 4 ஓவரில் 25 ரன் மட்டுமே தந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ஏமாற்றிய நட்சத்திர வீரர்கள்

பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா 5 பந்தில் 7 ரன், பிரப்ஸிம்ரன் சிங் 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து கேப்டன் திலக் வர்மா 14 பந்தில் 14 ரன்கள், ஆயுஸ் பதோனி 24 பந்தில் 31 ரன்கள், நெகேல் வதேரா 14 பந்தில் 20 ரன்கள், நிஷாந்த் சிந்து 13 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்கா டி20.. இந்திய அணி அறிவிப்பு.. திலக் வர்மா ரிட்டர்ன்.. 3 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு

ஒருமுனையில் தனியாக போராடிய ரமன்தீப் சிங் 34 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உடன் 64 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆப்கானிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -