“ஆப்கான் டி20 சீரிஸ்.. இந்த 26 வயது இந்திய வீரரின் வாழ்க்கையே இங்கதான் இருக்கு” – ஜாகீர் கான் பேச்சு!

0
455
Zaheer

இந்திய அணி தற்பொழுது 3 வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் செய்து விளையாடி முடித்திருக்கிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி உள்நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

இதற்கு நடுவே இந்திய அணி ஜனவரி 11-ம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக உள்நாட்டில் விளையாடுகிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் முதல் வெள்ளைப்பந்து தனிப்பட்ட தொடராக இது அமைகிறது. இதற்கு முன்பாக இரு நாடுகளுக்கு இடையே வெள்ளைப்பந்து தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை.

மேலும் ஐபிஎல் தொடர் முடிந்து நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 தொடரும் இதுவாகத்தான் அமைகிறது.

- Advertisement -

எனவே இந்தத் தொடரில் எப்படியான இந்திய அணியை தேர்வு செய்கிறார்கள் என்பதை பொறுத்து பல கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியும் என நம்பப்படுகிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவார்களா என்பது குறித்தும் பதில்கள் தெரியவரும். மேலும் காயமடைந்த ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் இருவரும் இடம் பெற மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர் குறித்து பேசி உள்ள முன்னாள் இந்திய வீரர் ஜாகிர் கான் கூறும் பொழுது “இது ஒரு மிக முக்கியமான தொடராக இருக்கும். இந்தத் தொடரில் இருந்து இந்திய டி20 அணி எந்த திசையில் செல்கிறது என்பது குறித்து நாம் ஒரு தெளிவுக்கு வர முடியும். டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இது ஒரு சிறந்த வாய்ப்பு.

இந்த டி20 வடிவத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த வடிவத்தில் நிறைய அப்செட்களை நாம் பார்த்திருக்கிறோம். இந்தத் தொடருக்கு எந்த மாதிரியான இந்திய அணியை தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது குறித்து பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.

ஆப்கானிஸ்தானை பொருத்தவரை எப்பொழுதும் ரஷீத் கான் பெயர் முதலில் இருக்கும். ஆனால் அறுவை சிகிச்சை முடித்திருக்கும் அவர் அதற்குள் தயாராகி விடுவாரா என்று தெரியவில்லை. அவர் இல்லை என்றால் அவருடைய இடத்தில் நூர் அகமது விளையாடலாம்.

இந்தியாவிலேயே பொருத்தவரை rung நிறைய நம்பிக்கை கொடுத்த வீரராக இருக்கிறார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை இங்கிருந்து எப்படி நகரப் போகிறது என்பதை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!