ரோஹித் ஷர்மா குறித்து 13 ஆண்டுகளுக்கு முன்பு கில்கிறிஸ்ட் கூறிய செய்தி – சமூக வலைதளங்களில் தற்போது வைரல்

0
2524
Rohit Sharma and Adam Gilchrist

மூன்று விதமான கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியின் புதிய கேப்டனாக தற்போது ரோகித் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து பதவி விலகிய கேப்டன் கோலி ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு வெகு சீக்கிரமாகவே டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்ததால் மூன்று விதமான கிரிக்கெட்டுக்கும் ரோகித் புதிய கேப்டனாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக கேப்டன் பொறுப்பிலிருந்து பலரும் விலகும் 34 வயதில் இந்திய அணியில் நிரந்தர கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். கோலி இந்திய டெஸ்ட் அணியை உலகின் மிகச் சிறந்த அணியாக உயர்த்தியுள்ள நிலையில் அதை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு ரோஹித்துக்கு உள்ளது. கூடவே பல ஆண்டு காலமாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணியை கோப்பை வெல்ல வைக்க வேண்டிய பொறுப்பும் ரோஹித்துக்கு உள்ளது. கூடவே உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரையும் வென்றாக வேண்டும்.

- Advertisement -

இப்படி பல பொறுப்புகளை தனது தலையில் ஏற்றுக்கொண்டு கேப்டன் பதவிக்கு வந்துள்ள ரோகித் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் 13 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் தொடர் நடந்தபோது டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக கில்கிறிஸ்ட் இருந்தார். அவருக்கு துணை கேப்டனாக அப்போது ரோகித் பங்காற்றினார்.

அப்போது ஒருமுறை ரோகித் தன்னுடைய துணை கேப்டன் பொறுப்பு குறித்து மிகவும் கவனமுடன் இருப்பதாகவும் சீக்கிரம் கேப்டனாக முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இது தனக்கு அதிக உற்சாகம் அளிப்பதாகவும் இன் கிரிஸ்ட் அப்போது கூறியிருந்தார். அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரை டெக்கான் சார்ஜர்ஸ் அணி கைப்பற்றியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கில்கிறிஸ்ட் இவ்வாறு கூறி சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகித் இந்திய அணியின் முழுநேர கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ளார். தனக்கு கொடுக்கப் பட்டிருக்கும் பணியை கேப்டன் பதவி மூலம் ரோகித் எப்படி சாத்தியப்படுத்த போகிறார் என்பதை காண இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -