” ரிஷப் பண்டின் ஈகோவால் ஆட்டத்தில் சரிவு ” – டெல்லி அணிக் கேப்டன் குறித்து ஆகாஷ் சோப்ரா அதிரடிப் பேச்சு

0
128
Aakash Chopra about Rishabh Pant

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 15வது போட்டி, ரிஷாப் பண்ட்டின் டெல்லி அணிக்கும், மயங்க் அகர்வாலின் பஞ்சாப் அணிக்கும் இடையே, நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தோற்கும் அணி ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் டெல்லி அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டார். இதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக வார்னர்-சர்ப்ராஸ்கான் ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரை லிவிங்ஸ்டன் வீசுகிறார் என்று தெரிந்ததும், சர்ப்ராஸ்கானை ஸ்ட்ரைக் எடுக்க வேண்டாமென்று கூறி, தானே ஸ்ட்ரைக் எடுத்த வார்னர் முதல் பந்திலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஆனால் மற்றுமொரு துவக்க ஆட்டக்காரராகப் புதிதாக வந்த சர்ப்ராஸ்கான் 16 பந்துகளில் அதிரடியாய் 32 ரன்கள் குவித்து, நல்ல தொடக்கத்தை உருவாக்கி உருவாக்கித் தந்தார்.

- Advertisement -

மறுமுனையில் நங்கூரமிட்டு நின்ற ஆல்ரவுண்டர் மிட்ச்செல் மார்ஷ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்ப்ராஸ்கான் வெளியேறியதும் உள்ளே வந்த லலித் மிகுந்த தடுமாற்றத்துடனே விளையாடினார். இறுதியாக அவர் 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து லியாம் லிவிங்ஸ்டன் வீசிய ஆட்டத்தின் 12வது ஓவரில் களம் கண்ட ரிஷாப் பண்ட், அந்த ஓவரில் ஒரு ரன் ஆடி, மீண்டும் அதே ஓவரில் 5வது பந்திற்கு ஸ்ட்ரைக்கிற்கு வந்து, தடுமாற்றத்துடன் ஒற்றைக் கையில் ஒரு சிக்ஸரை அடித்தார். அந்த ஓவருக்கு தேவையான ரன்கள் வந்திருந்த போதும், தேவையே இல்லாமல் அடுத்த பந்தில் இறங்கி வந்து, ஸ்டம்பிங் முறையில் விக்கெட் கீப்பரால் வெளியேற்றப்பட்டார்.

இதுக்குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “இந்த ஆட்டத்தில் எனக்குப் புரியாத சில முடிவுகள் உள்ளன. லலித் யாதவ் ஏன் முன்னால் வந்தார். அவர் 21 பந்துகளில் 24 ரன்களையே அடித்தார். ரிஷாப் நிறைய பந்துகளைச் சந்தித்து ஆடவேண்டும். லியாம் லிவிங்ஸ்டனின் ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்துவிட்டு, அடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்க நினைத்து, ஆட்டமிழந்தது ஏன்? உண்மையில் அவரது பந்தை மைதானத்திற்கு வெளியே அடிக்க நினைத்து, ஈகோவால்தான் ரிஷாப் பண்ட் ஆட்டமிழந்தார்” என்று கூறியுள்ளார்!