இந்திய கிரிக்கெட்

பிசிசிஐ கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.. கம்பீருக்கு முதல் அதிரடி நடவடிக்கை.. வீரர்களுக்கு ஏமாற்றம்.. வெளியான தகவல்கள்

பிசிசிஐ கடந்த மாதத்தில் இந்திய அணிக்கு பத்து விதிகள் கொண்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதில் சில முக்கியமான கட்டுப்பாடுகள் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அமலில் வந்திருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து கோபமடைந்த பிசிசிஐ சில அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ விதித்த முக்கிய கட்டுப்பாடுகள்

பிசிசிஐ இந்திய வீரர்கள் எப்பொழுதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பியது. ஏனென்றால் கடந்த சில மாதங்களில் இந்திய அணியில் இருந்த பழைய ஒற்றுமை காணப்படவில்லை என்று செய்திகள் கசிந்தன. எனவே வீரர்கள் அனைவரும் அணி பேருந்தில் செல்ல வேண்டும், ஒரே ஹோட்டலில் தங்க வேண்டும், பயிற்சி முன்கூட்டியே முடிந்தாலும் அங்கேயே இருந்து மற்ற வீரர்களுடன் இணைந்து செல்ல வேண்டும் என்று கூறியிருந்தது.

மேலும் வீரர்கள் 45 நாட்கள் கொண்ட நீண்ட சுற்றுப்பயணத்தில் மட்டுமே இரண்டு வாரங்கள் தங்கள் குடும்பத்தாரை வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ விதியை மாற்றி இருந்தது. மேலும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட உதவியாளர்களை தங்களுடன் தங்க வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

- Advertisement -

கம்பீருக்கு முதல் நடவடிக்கை

இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் எப்பொழுதும் தன்னுடைய மேனேஜரை உடன் வைத்திருப்பார். தற்போது இந்த கட்டுப்பாடுகள் அமலில் வந்திருப்பதால் கம்பீர் தன்னுடைய மேனேஜரை வேறு ஒரு ஹோட்டலில் தங்க வைத்திருக்கிறார். மேலும் அவர்கள் அணி பயணம் செய்யும் பேருந்தில் இனி இணை இணைந்து வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி.. கெவின் பீட்டர்சனின் இந்திய பிளேயிங் XI.. கம்பீருக்கு எதிர் ரூட்.. 2 இரண்டு முக்கிய மாற்றம்

தற்பொழுது நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி 45 நாட்கள் நடைபெறும் நீண்ட தொடர் கிடையாது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்பத்தாரை தங்களுடன் வைத்துக் கொள்ள முடியாது. தற்பொழுது இந்திய அணியுடன் அவர்களுடைய குடும்பத்தார் பயணம் செய்யவில்லை என பிசிசிஐ அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இனி இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக பின்பற்றப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts