இளம் வீரரை வருங்கால கேப்டனாக உருவாக்குங்கள், ரகானேவை துணைகேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு கடுப்பான ரசிகர்கள்!

0
869

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அஜிங்கியா ரகானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராதவிதமாக எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணிக்கு பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட்ட ரகானே முதல் இன்னிங்சில் 89 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்கள் அடித்த கொடுத்தார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

- Advertisement -

கிட்டத்தட்ட 16 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து அத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பிறகு இந்திய அணி வருகிற ஜூலை மாதம் இரண்டாவது வாரம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்று, இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள ரகானே, இம்முறை துணைகேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே இவர் டெஸ்ட் அணியின் துணைகேப்டன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை என்கிற காரணத்திற்காக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த தொடயிலிருந்து டெஸ்ட் அணியில் இருந்தும் விலக்கப்பட்டார். 16 மாதங்களுக்குப் பிறகும் மீண்டும் இடம் பிடித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நன்றாக விளையாடியதால் இப்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் எடுக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

டெஸ்டில் மீண்டும் ரகானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு சிலர் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தாலும் பலர் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஏனெனில் ரகானே தற்போது 35 வயதை நெருங்குகிறார். ஏற்கனவே கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா 36 வது வயதை எட்ட உள்ளார்.

இவர்கள் இருவரும் சென்ற பிறகு இந்திய அணிக்கு யார் அடுத்த கேப்டனாக இருப்பார்கள்? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது. அதற்காக இது போன்ற தொடர்களில் இளம் வீரர்களுக்கு பொறுப்பு கொடுத்து உருவாக்க வேண்டும் வளர வைக்க வேண்டும்.

ஏற்கனவே ஒருநாள் போட்டிகளிலும் இந்த தவறை செய்திருக்கிறது இந்திய அணி நிர்வாகம். தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் இதை செய்து வருவதால் எதிர்கால இந்திய அணிக்கு முறையான, நன்கு வழிநடத்தக்கூடிய கேப்டன்கள் அமையாமல் போகலாம் என்கிற அச்சத்திலும் இருக்கின்றனர்.