யுவராஜ் சிங் தவான் உடன் 5 நாள் பயிற்சி.. லாராவின் அக்கறை.. அபிஷேக் சதம் வந்தது எப்படி? – தந்தை பேட்டி

0
608
Lara

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அதிரடி சதம் அடித்த தன் மகன் அபிஷேக் சர்மாவுக்கு யுவராஜ் சிங் உட்பட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் எப்படியான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்? என்பது குறித்து அவர் தந்தை ராஜ்குமார் சர்மா பேசியிருக்கிறார்.

நடந்து முடிந்த ஐந்தாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா வெறும் 53 பந்துகளில் 13 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உடன் அதிரடியாக 135 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தினார். அவருடைய பேட்டிங் தற்போது அவருக்கு மெண்டராக இருந்து வரும் யுவராஜ் சிங்கை ஞாபகப்படுத்தும் அளவுக்கு இருந்தது. அவரது பிசிறில்லாத அதிரடி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

- Advertisement -

யுவராஜ் சிங் உடனான முதல் சந்திப்பு

அபிஷேக் ஷர்மா வளர்ச்சி பற்றி பேசி உள்ள அவரது தந்தை ” யுவராஜ் சிங் அபிஷேக் சர்மாவுக்காக எப்பொழுதும் இருக்கிறார். முதல் முறையாக ரஞ்சிப் போட்டியில் அவரை பார்த்தவர் தன் பயிற்சியில் விளையாட சம்மதமா? என்று கேட்டார். உடனடியாக அபிஷேக் ஷர்மா யுவராஜ் சிங் உடன் இணைந்தார். அவரிடம் நீங்கள் என்னுடைய ஐடியல் மற்றும் கடவுள், நான் உங்கள் விளையாட்டு பார்த்துதான் வளர்ந்தேன் என்று கூறினார். பிறகு யுவராஜ் சிங் பயிற்சியில் அவர் சிறப்பானவராக மாறினார். எப்பொழுதும் அவரை உடன் வைத்துக் கொள்கிறார். அது ஐந்து நாட்களாக இருந்தாலும் 10 நாட்களாக இருந்தாலும் சரி”

“இங்கிலாந்து தொடருக்கு ஐந்து நாட்கள் இருக்கும்பொழுது அவரைப் பேசி யுவராஜ் சிங் வரவழைத்தார். பின்பு அவருக்கு பயிற்சிகள் ஆரம்பித்தது. அவரது மனநிலையை மாற்றி நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவது குறித்து பயிற்சி அளித்தார். இந்த காலகட்டத்தில் தவான் அவருடன் இணைந்து இருந்தார். யுவராஜ் சிங் உடைய மொத்த யூனிட்டும் அபிஷேக் ஷர்மாவுக்காக வேலை செய்கிறது”

- Advertisement -

பெரிய வீரர்களுடன் கிடைத்த அனுபவம்

“இந்திய அணியில் விவிஎஸ் லக்ஷ்மன், ராகுல் டிராவிட், கம்பீர் போன்றவர்கள் இடம்தான் வளர்ந்தேன் என எத்தனை வீரர்களால் கூற முடியும்? இப்படியான மிகப்பெரிய ஜாம்பவான் வீரர்களுடன் இணைந்து இருக்க என் மகனுக்கு வாய்ப்பு அமைந்தது பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன். மேலும் பஞ்சாப் மாநில அணிக்காக விளையாடிய பொழுது வாசிம் ஜாஃபரும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்”

இதையும் படிங்க : இங்கி முதல் ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? – முழு அலசல்

“இது மட்டும் இல்லாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் லாரா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தினமும் அபிஷேக் சர்மாவிடம் பேசக்கூடியவராக இருக்கிறார். அவரைப் பற்றி நிறைய விஷயங்களை கேட்டும் வெளியில் தெரிந்து கொள்கிறார். தொடர்ந்து அவருக்கு என்ன தேவையோ அந்த ஆலோசனைகளை அவர் கூறி வருகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -