இந்திய கிரிக்கெட்

ஷாகின் அப்ரிடிக்கு எதிரா.. 10 வருஷத்துக்கு முன்னவே அபிஷேக் சர்மாவ ரெடி பண்ணிட்டேன் – தந்தை பேட்டி

கிரிக்கெட்டில் அதிவேக பந்துவீச்சாளர்களை சிரமம் இன்றி சந்தித்து விளையாடுவதற்கு தன்னுடைய மகன் அபிஷேக் ஷர்மாவை 10 வருடங்களுக்கு முன்பே எப்படி தயார் படுத்தினேன்? என்பது குறித்து அவரது தந்தை பேட்டி அளித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசையில் அபிஷேக் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார். வீரேந்தர் சேவாக் போல முதல் பந்தில் இருந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் பந்தை காற்றில் அடித்து அணிக்கு அதிரடியான துவக்கத்தை கொடுப்பதில் வல்லவராக இருக்கிறார்.

ஷாகினுக்கு தந்த ட்ரீட்மென்ட்

இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில், இந்திய அணிக்கு பந்துவீச்சில் கடந்த காலத்தில் அச்சுறுத்தலாக இருந்த ஷாகின் அப்ரிடி வீசிய முதல் பந்தை இறங்கி வந்து அபிஷேக் ஷர்மா பவுண்டரி அடித்தார். இரண்டாவது தந்தை நின்ற இடத்தில் இருந்து சிக்ஸ் அடித்தார். மேலும் ஒரு பந்தை லெக் சைடில் சிக்ஸர் அடித்தார்.

இந்த பந்துகள் எல்லாமே மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இருந்தவை. இப்படியான அதிவேக பந்துகளை சுழல் பந்துவீச்சை சாதாரணமாக அடித்து நொறுக்குவது போல அபிஷேக் ஷர்மா அடித்து நொறுக்கினார். இப்போது இதற்கு அவர் எவ்வாறு பயிற்சி பெற்றார்? என்பது குறித்து அவர் தந்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

பத்து வருடங்களுக்கு முன்பே…

இதுகுறித்து அவருடைய தந்தை ராஜ்குமார் ஷர்மா பேசும் பொழுது “நான் அபிஷேக் ஷர்மாவை பதினாறு வயதுக்கு உட்பட்ட அணிக்கு தயார் செய்யும் பொழுது அவரை மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வந்து பேச வைத்து பேட்டிங் பயிற்சி செய்ய வைத்தேன். இந்த வேகத்தில் வரும் பந்தை விளையாடினால் காயம் அடைந்து விடுவோம் என்று மற்றவர்கள் சொல்லும் வகையில் பயிற்சி கொடுத்தேன். அப்போதெல்லாம் அபிஷேக் சர்மா என்னிடம் இன்னும் வேகமாக வீசச் சொல்லுங்கள் நான் விளையாடுவேன்” என்று சொல்லுவார்.

இதையும் படிங்க : இதுக்கு எதுக்கு இவ்வளவு ஆட்டம்.. திடீர் பல்டி அடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.. இந்தியா பக்கம் சாதகம்

“நான் அவரை மைதானத்திற்கு அழைத்துச் செல்லும் போதெல்லாம் அங்கு இருக்கும் வயதில் மூத்த வீரர்கள் ‘உங்கள் பையனுக்கு நிறைய திறமை இருக்கிறது ஒரு நாள் நிச்சயம் இந்திய அணிக்கு விளையாடுவார்’ என்று சொல்லுவார்கள். அவர்களின் ஆசிர்வாதமும் அன்பும் எங்கள் மகனை இங்கு கொண்டு வந்து சேர்த்து இருக்கிறது. வருங்காலங்களில் பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்று தருவார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by