நான் செலக்ட்டானதும்.. இந்திய டீம்ல இருந்து இவர்தான் போன் பண்ணார்.. வீட்டுக்கு போனா அதைவிட ஆச்சரியம் – அபிஷேக் சர்மா பேட்டி

0
1414
Abhishek

இந்திய கிரிக்கெட் வெகு வேகமாகப் புதிய வீரர்கள் மற்றும் புதிய கேப்டன் உடன் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பயணிக்க இருக்கிறது. இதன் துவக்கமாக டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணியில் நிறைய மாறுதல்கள் ஏற்பட இருக்கின்றன. இதற்கு முதல் ஆரம்பமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் இருக்கிறது. இந்தத் தொடருக்கு முதல் முறையாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அபிஷேக் சர்மா முதலில் தேர்வானதைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இளம் வீரர் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணியை ஜிம்பாப்வேவுக்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட அனுப்புகிறது. மேலும் டி20 உலக கோப்பையில் விளையாடிய முக்கிய வீரர்கள் இந்தத் தொடரில் இடம் பெறவில்லை.

- Advertisement -

மேலும் இந்த தொடரில் முதல் முறையாக ரியான் பராக், அபிஷேக் ஷர்மா, ஹர்ஷித் ராணா, துருவ் ஜுரல், துஷார் தினேஷ் பாண்டே ஆகிய வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் விளையாடும் அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக நான் இருக்கும் மேற்பட்ட ரன்களை 200 ஸ்டிரைக் ரேட்டில் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா அடித்திருந்தார். இவர் பஞ்சாப் மாநில அணிக்காகவும் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார். இவர் தருகின்ற அதிரடி தொடக்கத்தின் காரணமாக முதல் ஆறு ஓவர்களிலேயே போட்டி கையில் வந்து விடுகிறது. மேலும் இவர் இடது கை சுழல் பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். எனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவரை மிகவும் எதிர்பார்க்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது பற்றி பேசி இருக்கும் அபிஷேக் சர்மா கூறும் பொழுது “என்னை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை குறித்து முதலில் போன் செய்து கில்தான் கூறினார். நான் இது தொடர்பாக பேட்டி எதுவும் கொடுப்பதற்கு முன்பாக வீட்டிற்கு சென்றேன். அங்கு ஆச்சரியமாக எனக்கு முன்னால் என்னுடைய பெற்றோர்கள் பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார்கள்.

இதையும் படிங்க : ஜிம்பாப்வே தொடர்.. திறமை இருந்தும் புறக்கணிக்கப்பட்ட 8 வீரர்கள்.. மீண்டும் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

நான் விளையாட ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்து வந்தது. நான் கடினமாக உழைத்தால் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியும். அதேசமயத்தில் என்னுடைய அறிமுகம் இந்தியாவுக்கு வெளியே ஜிம்பாப்வே நாட்டில் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -