நான் 3 டக் அடிச்சப்ப.. கம்பீர் சூர்யா ஹர்திக் பாய் உடனடியாக இதை செய்ய வச்சாங்க – அபிஷேக் ஷர்மா பேட்டி

0
3
Abhishek

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் மூன்று டக் அவுட்டுகள் ஆனதும் அண்ணியிடமிருந்து என்ன அறிவுரை வந்தது என அபிஷேக் ஷர்மா கூறியிருக்கிறார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா தான் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து மிக மோசமான சாதனையை படைத்தார். ஆனால் இறுதிப் போட்டியில் 18 பந்தில் அரை சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெற ஒரு காரணமாக இருந்தார்.

- Advertisement -

தொடரும் கதை

2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி இறுதிப்போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதே போல அபிஷேக் ஷர்மாவும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இறுதிப்போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடினார்.

மேலும் அபிஷேக் ஷர்மா மூன்று டக் அவுட் ஆன சூழ்நிலையில் வெளியில் இருந்து அவருக்கு நிறைய ஆலோசனைகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கூறப்பட்டது. தமிழ்நாட்டு அளவில் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்ரிநாத் போன்ற முன்னாள் வீரர்கள் அறிவுரைகளை கூறியிருந்தார்கள்.

- Advertisement -

இதைத்தான் செய்தேன்

இதுகுறித்து அபிஷேக் ஷர்மா பேசும் பொழுது “நீங்கள் சரியாக விளையாடாத பொழுது உங்களை நோக்கி வரும் விமர்சனங்கள் முதலில் மோசமாக இருக்கும். ஏனென்றால் மக்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார்கள். நான் மூன்றாவது முறை டக் அவுட் ஆன பொழுது கம்பீர் சார், கேப்டன் சூர்யா பாய், ஹர்திக் பாய் மூன்று பேரும் உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறச் சொன்னார்கள்”

இதையும் படிங்க : விராட் கோலிக்கு தன்மானம் இருக்கு.. ஆனா எங்க பாபருக்கு அது இல்லை.. அதான் கேவலமா ஆயிடுச்சு – பசித் அலி பேச்சு

“நான் உடனே சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறினேன். அங்கு நிறைய என் குறித்து செய்திகள் பகிரப்பட்டு வந்தது. நான் இந்த அப்ளிகேஷன்களை டெலிட் செய்ததும் இதிலிருந்து என்னால் தப்பிக்க முடிந்தது. மக்கள் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கின்ற காரணத்தினால் இப்படியான சூழ்நிலையில் நிறைய விமர்சனங்கள் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -