ஆசிய கோப்பை

பாகிஸ்தான் வீரர்கள் பர்சனல் பேசி திட்டினாங்க.. இது கிரிக்கெட் ஆடற முறை இல்ல – அபிஷேக் ஷர்மா வருத்தம்

நேற்று பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் தங்களை பர்சனல் ஆக தாக்குதல் செய்ததாக இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா வீரேந்தர் சேவாக் உடனான உரையாடலின் போது தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 39 பந்துகளில் அதிரடியாக 79 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை பரிதாப தோல்வி அடைய வைத்தார்.

களத்தில் ஏற்பட்ட மோதல்

பாகிஸ்தான் அணி பந்து வீச்சுக்கு வந்த பொழுது முதல் ஓவரிலேயே இந்திய தொடக்க ஆட்டக்காரர்களிடம் ஷாகின் அப்ரிடி மோதலில் ஈடுபட்டார். ஆனால் அது பெரிய அளவில் செல்லவில்லை. துணை கேப்டன் சுப்மன் கில் ஏதோ கூறி அங்கிருந்து உடனடியாக நகர்ந்து சென்று விட்டார்.

இதைத் தொடர்ந்து ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சுக்கு வந்த பொழுது அவர் அபிஷேக் ஷர்மாவிடம் வாய் தகராறில் ஈடுபட ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து அபிஷேக் சர்மாவும் அவருக்கு கோபமாக களத்தில் பதிலளித்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்ததும் இது குறித்து தொலைக்காட்சியில் வீரேந்தர் சேவாக்கிடம் அபிஷேக் ஷர்மா பேசினார்.

- Advertisement -

இது முறை இல்லை

இதுகுறித்து அபிஷேக் ஷர்மா பேசும் பொழுது ” இன்று இதுபோன்ற ஒரு பர்பாமன்ஸை கொடுத்தே ஆக வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒவ்வொரு பந்துக்குப் பிறகும் பாகிஸ்தான் வீரர்கள் எங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர்களுக்கு என் வழியில் பதில் அளிக்க வேண்டியது முக்கியம் என்று நான் முடிவு செய்தேன்”

இதையும் படிங்க: சூர்யகுமார் டக் அவுட்டாகியும் உங்களால ஜெய்க்க முடியல.. இல்லனா கதையே வேற.. பாகிஸ்தான் குறித்து கவாஸ்கர் சாடல்

“இது கிரிக்கெட் விளையாடும் முறை இல்லை. நானும் இன்னும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று பேசிக்கொண்டோம். பிறகு நாங்கள் அதுபடியே செய்து முடித்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -
Published by

Recent Posts