ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிக புள்ளிகள் எடுத்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார்.
மேலும் ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் வரும் சக்கரவர்த்தி தன்னுடைய முதல் இடத்தை தக்கவைத்து தொடர்கிறார். திலக் வர்மாவும் தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறார்.
வருண் சக்கரவர்த்தி முதலிடம்
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் ரேங்க் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 803 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்த இரண்டு இடங்களில் நியூசிலாந்தின் ஜேக்கப் டப்பி 717, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா 700 புள்ளிகள் எடுத்து இருக்கிறார்கள்.
மேலும் முதல் பத்து இடங்களில் இந்தியாவிலிருந்து வேறு எந்த பந்துவீச்சாளர்களும் இல்லை. குல்தீப் யாதவ் 648 புள்ளிகள் உடன் 12வது இடத்திலும், அக்சர் படேல் 635 புள்ளிகள் உடன் 13வது இடத்திலும் இருக்கிறார்கள்.
அபிஷேக் ஷர்மா சாதனை
அபிஷேக் ஷர்மா மொத்தம் 926 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலில் இங்கிலாந்தின் டேவிட் மலான் 919 புள்ளிகள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது இதை அபிஷேக் ஷர்மா முறியடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : 78 பந்தில் ஆஸியில் சூரியவன்சி ருத்ர தாண்டவம்.. 14 வயதில் நினைத்து பார்க்க முடியாத சாதனை
டி20 பேட்ஸ்மேன் ரேங்கிங் :
அபிஷேக் – ஷர்மா – 926
பில் சால்ட் – 844
திலக் வர்மா – 819
ஜோஸ் பட்லர் – 785
பத்தும் நிஷாங்கா – 779
டிராவிஸ் ஹெட் – 771
டிம் செப்பர்ட் – 725
சூர்யகுமார் யாதவ் – 698
குசல் பெரேர – 692
டிம் டேவிட் – 676






