இவரின் ஆட்டத்தைக் கண்டு நிச்சயம் ஏ.பி.டிவிலியர்ஸ் மகிழ்ந்திருப்பார் – விராட் கோஹ்லி

0
74
Virat Kohli and Ab de Villiers

ஐ.பி.எல்-ல் இன்றைய வாரத்தின் முதல் டபுள் ஹெட்டரில், இரண்டாவது போட்டியில், மும்பையின் வான்கடே மைதானத்தில், ரிஷாப்பின் டெல்லி அணியும், பாஃப்பின் பெங்களூரும் அணியும், நேற்று பலப்பரீட்சை நடத்தியிருந்தன!

முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பெங்களூர் அணியை பேட் செய்ய அழைக்க, வந்தவர்கள் வரிசையாக பெவிலியன் திரும்ப ஆரம்பித்தனர். கேப்டன் பாஃப், அனுஜ், விராட்கோலி, பிரபுதேசாய் என நான்கு விக்கெட்டுகளை பெங்களூர் சீக்கிரத்தில் இழந்துவிட்டது.

- Advertisement -

ஆனால் மனம் தளராத மேக்ஸ்வெல் ஒருபுறத்தில் நின்று அதிரடியாக ஆடி அரைசதமடித்தாலும், அணியின் ஸ்கோர் 92 ரன்களாக இருக்கும் போது அவரம் ஆட்டமிழந்துவிட பெங்களூர் மீண்டும் சிக்கலில் சிக்கியது. இப்போது இணைந்த ஷாபாஸ், தினேஷ்கார்த்திக் ஜோடி மொத்தமாய் ஆட்டத்தை அப்படியே திருப்பிட்டது. குறிப்பாய் 360 டிகிரியில் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் பேயாட்டம் ஆடிவிட்டார்!

இதுக்குறித்து பேசிய விராட்கோலி “தென்ஆப்பிரிக்காவின் பிரட்டோரியா நகரின் தன் வீட்டிலிருந்து, தினேஷ்கார்த்திக் இறுதிநேரத்தில் அதிரடியாய் ஆடி அணியை முன்னெடுத்துச் சென்றதைப் பார்த்து ஏ.பி.டிவிலியர்ஸ் மகிழ்ந்திருப்பார்” என்று கூறியிருக்கிறார்!