கோலி நம்புற மாதிரி ஒருத்தர் இருந்தா.. இந்த விஷயத்தை கட்டாயம் செய்வார் – முன்னாள் ஆர்சிபி வீரர் பேட்டி

0
68

இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர்

விராட் கோலியின் ஆஸ்தான நண்பரான ஏபி டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்கா அணியிலும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியும் உலக மக்களிடையே அதிக புகழ்பெற்றவர். மேலும் இந்திய அளவிலேயே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விளையாடிய காலத்தில் விராட் கோலியுடன் சேர்ந்து பல வெற்றிகரமான போட்டிகளை பெங்களூர் அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்து மோசமான விமர்சனங்கள் வெளிவந்தது. அவர் மெதுவாக விளையாடுகிறார் எனவும், இதனால் அவர் டி20 உலக கோப்பையில் விளையாடக் கூடாது எனவும் கருத்துக்கள் வெளிவந்தன. ஆனால் அதே டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் தான் இந்திய அணி கோப்பையை வென்றது என்பது வேறு கதை. இந்த சூழ்நிலையில் தற்போது டிவில்லியர்ஸ் அதற்கான பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

பரிசோதனை முயற்சிகள் செய்வார்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்த ஆய்வு முற்றிலும் அபத்தமானது. அவர் தனது அணிக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்தார். இது அனைத்துமே அந்த சூழ்நிலையை பொறுத்ததாகும். பேட்டிங் செய்யும்போது மறுமுனையில் அவர் நம்பும் ஒருவர் இருக்கும் போது விராட் கோலி அதிக சுதந்திரத்தோடு பரிசோதனை செய்து விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் அப்படி இல்லாத போது அவர் தனது இயல்பான ஆட்டத்திற்கு சீக்கிரம் திரும்பி விடுவார்” என்று பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க:முகமது சமி செய்தது பெரிய குற்றம்.. அவர் மக்களுக்கு தவறான செய்தி பரப்புகிறார் – அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர்

விராட் கோலி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வரும் நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார். தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். எனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் இதிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -