ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் நடைபெறும் நிலையில் இந்த வருடம் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திகழ்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆர்சிபி விராட் கோலி குறித்து முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் வலுவான அணிகளில் ஒன்றாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 17 வருடங்களாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறது. நட்சத்திர பேட்டிங் வரிசை, நட்சத்திர கேப்டன் என அனைத்தும் இருந்தும் ஒவ்வொரு சீசனிலும் ஏதோ ஒரு பிரச்சினையால் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறது. இதில் குறிப்பாக ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்த அணியின் வீரர் டிவிலியர்ஸ் ‘ஈ சாலா கப் நமதே’ என்ற வார்த்தையை பயன்படுத்தி ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று கூறுவார்.
மேலும் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது நிகழ்ச்சிகள் மற்றும் வேறு ஏதாவது பேட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று சொல்லி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஆனாலும் ஒரு வருடம் கூட கோப்பையை வெல்லாததால், அந்த வார்த்தையை இனிமேல் பயன்படுத்த வேண்டாம் என்று விராட் கோலி கேட்டுக் கொண்டதாக டிவிலியர்ஸ் நகைச்சுவையான விஷயங்களை பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் அந்த வார்த்தைகளை ஏதோ ஒரு நாளில் குறிப்பிடும் போது விராட் கோலி இடம் இருந்து எனக்கு நேரடியாக செய்தி வந்தது. அவர் தயவுசெய்து இப்போது அதை சொல்வதை நிறுத்துங்கள் என்று கூறினார். அதனால் நான் சற்று சிக்கலில் மாட்டிக் கொண்டேன். நியாயமாக சொல்லப்போனால் இந்த சீசனில் கோப்பை வருகிறது என்று எப்போதும் சொல்லி சோர்வடைந்து விட்டேன்.
இதையும் படிங்க:ரொம்ப சாதாரணமா ஆயிருச்சு.. நாங்க எப்போ தோற்போம்னு மக்களே காத்திருக்காங்க – பாக் ஹாரிஸ் ராப் ஆதங்கம்
நண்பர்களே இது ஐபிஎல், உலக கோப்பையை வெல்லக்கூடிய 10 உலக தரம் வாய்ந்த அணிகள் உள்ளன. ஐபிஎல்லை பொருட்படுத்தாமல் இதை வெல்வது என்பது கடினமான போட்டியாகும். இது ஐபிஎல் தொடரின் 18 வது சீசன் ஆகும். எனவே இந்த 18 வது சீசனில் ஆர்சிபி கோப்பையை வென்றால் விராட் கோலியுடன் நான் அதை ஏந்துவதற்கு தயாராக இருப்பேன்” என்று டிவிலியர்ஸ் கூறியிருக்கிறார்.