இந்திய கிரிக்கெட்

ஸ்ரேயாசை சேர்க்காத உண்மை விரைவில் வெளியே வரும்.. மோதலுக்கான காரணம் இதுதான் – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்கான உண்மை காரணம் விரைவில் வெளிவரும் என ஏபி.டிவில்லியர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் எல்லாத் திறமைகள் இருந்தும் ஒரு வீரரை அணியில் தேர்வு செய்யாததற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும் என்பது குறித்தும் அவர் விரிவாக அலசி இருக்கிறார். இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு நாளில் வெளிவந்து விடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மூடிய கதவுகளுக்கு பின்னால்

இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “மூடிய கதவுகளுக்கு பின்னால் என்ன நடந்தது என்று நம் யாருக்குமே தெரியாது. இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயருக்கும் தெரியாமல் இருக்கலாம். இந்த மாதத்தில் அவர் ஏன் இந்திய அணியில் இல்லை என்பதை சில ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வரும் விஷயங்கள் கூட தீர்மானிக்கலாம்”

“நான் ஆசிய கோப்பை இந்திய அணியை படித்த பொழுது அதில் ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் இல்லாததை பார்த்தேன். மேலும் அந்த அணியில் அவரை எங்கு பொருத்த முடியும் என்பது குறித்தும் யோசிப்பேன். ரசிகர்கள் இது குறித்து வருத்தப்படுவதையும் அறிகிறேன். மேலும் சில ஆண்டுகளாக அவர் நல்ல கிரிக்கெட் விளையாடியதால் ஏமாற்றம் அடைந்திருப்பார்”

- Advertisement -

இரண்டு விஷயங்கள் காரணம்

“இரண்டு வீரர்கள் சரிசம அளவில் செயல்பாட்டை கொண்டு இருக்கும் பொழுது மைதானத்தை தாண்டி அணிக்குள் என்ன கொண்டு வருகிறார்கள்? சக வீரர்களுடன் எப்படியான அணுகுமுறையை வைத்திருக்கிறார்கள்? அணிக்கு சக்தியை கொடுக்கிறார்களா? அல்லது அணியில் இருந்து சக்தியை எடுக்கிறார்களா? என்று நான் பார்ப்பேன்”

இதையும் படிங்க : உன் கோச்சை, என் பக்கம் வர கூடாதுனு சொல்லி வை.. சேவாக் செய்த தக் லைஃப் சம்பவம்! என்ன நடந்தது?

“இதற்கு அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல தலைமைத்துவ குணங்களை காட்டியிருக்கிறார். தற்போது அணியில் ஏற்கனவே கேப்டன்கள் இருக்கிறார்கள் எனும் பொழுது, இவரையும் உள்ளே கொண்டு வருவது பிரச்சினையை உண்டாக்கலாம் என்றும் நினைக்கலாம். எப்படி இருந்தாலும் இது குறித்த உண்மைகள் ஒருநாள் வெளியில் வரும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by