இந்திய கிரிக்கெட்டின் புதிய உடல்தகுதி தேர்வு மோசமானது.. நுரையீரலை எரித்து விடும் – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

0
160
Gambhir

தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு உடல் தகுதி தேர்வுக்கு பிரான்கோ என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது வீரர்களுக்கு மிகவும் கடினமானது என ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்பாக யோ யோ டெஸ்ட் முறை உடல் தகுதி தேர்வுக்கு இந்திய அணியில் இருந்து வந்தது. தற்போது ரக்பி விளையாட்டுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் உடல் தகுதி தேர்வு முறையான பிரான்கோ முறை இந்திய கிரிக்கெட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

அஸ்வின் விமர்சனம்

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த உடல் தகுதி முறை வீரர்களுக்கு கடினமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டுக்கு இவ்வளவு கடினமான உடல் தகுதி முறைகள் தேவையில்லை என்றும் வெளியில் சில விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருந்தபொழுது “புதிய பயிற்சியாளர்கள் வரும்பொழுது புதிய பயிற்சி முறைகளும் உள்ளே வருகிறது. அதே சமயத்தில் இவ்வளவு கடினமான பயிற்சி முறைகள் வீரர்கள் காயம் அடைவதற்கு வழிவகுக்கும்” என்று விமர்சனம் செய்திருந்தால்.

- Advertisement -

நுரையீரலை எரிக்கும்

இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்போது “இந்தப் பிரான்கோ உடல் தகுதி முறை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வந்த பொழுது அது குறித்து எனக்கு தெரியாது. பிறகு அவர்கள் இந்த முறை எப்படி என்று என்னிடம் விளக்கி கூறினார்கள். பிறகு நாங்கள் 16 வயதிலிருந்து இதைத்தான் செய்து கொண்டு வருகிறோம் என்பது எனக்கு புரிந்தது”

இதையும் படிங்க : அடுத்த பயிற்சியாளராக வருகிறாரா புஜாரா? பிசிசிஐயிடம் வெளிப்படையாக பேசிய புஜாரா.. முழு விவரம்

“இது செய்வதற்கு மிகவும் மோசமான ஒன்று. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவின் குளிர்காலங்களில் இந்த முறை மிகவும் கடினமானது. மேலும் ஆக்சிஜன் குறைவாக இருக்கும் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் மேலே இருக்கும் சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் இந்த பிரான்கோ பயிற்சி முறையை செய்யும் பொழுது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நுரையீரல் எரிந்து விடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -