இந்திய கிரிக்கெட்

74% ரோகித் சர்மா.. இந்த கதை தெரியுமா?.. அவரை நினைச்சு பெருமைப்படுங்க – ஏபி டிவில்லியர்ஸ் கருத்து

தற்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மாவின் சாதனைகள் குறித்து தென் ஆப்பிரிக்க லெஜன்ட் ஏபி டிவில்லியர்ஸ் மனம் திறந்து பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கைப்பற்றியது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளத்தில் நிலைத்து நின்று விளையாடி 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அத்தோடு ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

ரோகித் சர்மாவின் 74% வெற்றிகள்

இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “மற்ற கேப்டன்களுடன் ஒப்பிடுகையில் ரோகித் சர்மாவின் வெற்றி சதவீதத்தை பாருங்கள். அது கிட்டத்தட்ட 74 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த கால கேப்டன்களை விட மிகவும் அதிகம். அவர் தொடர்ந்து இந்த வடிவத்தில் விளையாடினால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டனாக அவரால் வர முடியும். அவர் தற்போது தான் ஓய்வு பெறவில்லை எனவும் வதந்திகள் பரப்ப வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்”

“ஏனென்றால் ஒரு கேப்டனாக மட்டும் இல்லாமல் அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் நிறைய சாதனைகள் படைத்திருக்கிறார். இறுதிப் போட்டியில் அவர் 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த விதம் மிகவும் அபாரமானது. அதுதான் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தது. மேலும் அழுத்தம் உச்சத்தில் இருந்த பொழுது அணியை முன்னணியில் இருந்து வழிநடத்தியது”

- Advertisement -

இந்த விஷயத்தில் காரணம் இல்லை

“தற்போது ரோகித் சர்மா ஓய்வு பெறுவதற்கு எந்த நியாயமான காரணங்களும் கிடையாது. மேலும் அவருக்காக அவர் செய்த சாதனைகள் பேசுகிறது. இத்தோடு அவர் பேட்டிங் செய்யும் முறையையும் மாற்றி அமைத்திருக்கிறார். முன்பை விட பவர் பிளேவில் அவருடைய ஸ்டிரைக் ரேட் மிகவும் அதிகரித்து இருக்கிறது. நீங்கள் கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட ஏதாவது மிச்சம் இருக்கிறது”

இதையும் படிங்க : இந்திய அணிக்கே முன்னுரிமை.. 6 வீரர்களை அள்ளிய முன்னாள் பாக் வீரர்.. சாம்பியன்ஸ் டிராபி பிளேயிங் லெவன்.. முழு விபரம்

“ஒரு இந்திய ரசிகராக நீங்கள் அவர் குறித்து பெருமைப்பட வேண்டும். இது அவருக்கு எப்பொழுதும் சாதாரணமாக இருந்தது கிடையாது. அவருக்கு ஏற்ற இறக்கங்கள் பழக்கமாக வந்து கொண்டே இருந்தது. இருந்த போதும் கூட பெரிய போட்டிகள் வந்தால் அவர் அணியை முன்னின்று வழிநடத்தக் கூடியவராக இருந்திருக்கிறார்” என்று பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by