தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தன்னுடைய கனவு டி20 அணியை அறிவித்திருக்கிறார்.
நவீன கிரிக்கெட் உலகில் பேட்டிங்கில் மிகப்பெரிய புதுமைகளை கொண்டு வந்த ஏ பி டிவில்லியர்ஸ் தன்னுடைய கனவு டி20 அணியில் தன்னுடைய நெருங்கிய கிரிக்கெட் நண்பர் விராட் கோலிக்கு இடம் கொடுத்ததோடு, நான்கு இந்திய வீரர்களுக்கும் இடம் அளித்திருக்கிறார்.
ஏபி டிவில்லியர்ஸ் அறிவித்திருக்கும் இந்த கனவு டி20 அணியில் விராட் கோலி இடம் பெற்று இருக்கிறார். மேலும் விக்கட் கீப்பராக ஹென்றி கிளாசன் இருந்த பொழுதிலும் கூட, இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை ஏபி டிவில்லியர்ஸ் சேர்த்திருக்கிறார்.
இதில் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக வேகப்பந்துவீச்சு யூனிட்டில் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா என இரண்டு இந்திய வீரர்களுக்கு இடம் ஒதுக்கி இருக்கிறார். மேலும் ரிசர்வ் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட மூன்று இடத்தையும் இந்திய வீரர்களுக்கு கொடுத்திருக்கிறார். இந்த அணியில் ரிசர்வ் வீரர்களாக தோனி, சாகல் இருவர் வருகிறார்கள். மேலும் ஆச்சரியப்படும் விதமாக மூன்று சர்வதேச போட்டிகள் மட்டுமே விளையாடிய மயங்க் யாதவையும் தன்னுடைய கனவு அணியில் ரிசர்வ் வீரராக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வருடம் டி20 உலகக் கோப்பையை கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் சிறப்பாக விளையாடி வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஏ பி டிவில்லியர்ஸ் தன்னுடைய கனவு அணியில் இடம் கொடுக்கவில்லை. அந்த இடத்தில் டிராவிஸ் ஹெட்டை துவக்க வீரராக வைத்திருக்கிறார்.
மேலும் தன்னுடைய அணியில் சுழல் பந்துவீச்சாளர்களாக சுனில் நரைன் மற்றும் ரஷீத் கான் இருவரையும் கொண்டு வந்திருக்கிறார். மேலும் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் தன் நாட்டைச் சேர்ந்த ககிசோ ரபாடாவை வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : 438 ரன்.. ஓபனிங்கில் ஷாருக் கான் அதிரடி.. வெற்றியின் விளிம்பில் தமிழ்நாடு அணி.. ரஞ்சி டிராபி 2024
ஏபி டிவில்லியர்ஸ் கனவு டி20 அணி
விராட் கோலி, டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், ரிஷப் பந்த், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், ரஷித் கான், சுனில் நரேன், புவனேஷ்வர் குமார், ககிசோ ரபாடா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா.
ரிசர்வ் வீரர்கள்: எம்எஸ் தோனி, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் மயங்க் யாதவ்.