இவர் விளையாடுவதைப் பார்க்கையில் எனக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்கிற ஆசை வருகிறது – ஏபி டிவிலியர்ஸ் பொறாமை

0
523
Ab de Villiers RCB

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நீண்டகாலமாக அதிரடி பினிஷராக விளையாடி வந்தவர் ஏபி டிவில்லியர்ஸ். நிறைய போட்டிகளில் கடைசி வரை ஒற்றை ஆளாக நின்று பெங்களூரு அணியை வெற்றி பெறச் செய்த பெருமை அவருக்கு உண்டு. கடந்த ஆண்டு அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். அவர் இல்லாத பெங்களூர் அணியை எப்படி விளையாடப் போகிறது என்கிற கேள்வி இருந்தது.

அந்த அனைத்து கேள்விக்கும் தற்பொழுது தினேஷ் கார்த்திக் தன்னுடைய பேட்டிங் மூலம் பதிலளித்து வருகிறார்.நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் மிக அற்புதமாக விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

6 போட்டிகளில் மொத்தமாக 197 ரன்கள் குவித்திருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கின் ஸ்ட்ரைக் ரேட் 209.57ஆக உள்ளது. அதுமட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 197 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர் விளையாடுவதை பார்க்கையில் எனக்கும் கிரிக்கெட் விளையாடும் ஆசை வந்துவிட்டது – ஏபி டிவில்லியர்ஸ்

தினேஷ் கார்த்திக் விளையாடும் விதம் மிக அபாரமாக இருக்கிறது. 360 டிகிரியில் அனைத்து ஏரியாக்களிலும் அவர் ஸ்கோர் செய்கிறார். மிடில் ஆர்டரில் அணி சிக்கலான நேரத்தில் இருக்கும் வேளையில் களமிறங்கி, எந்தவித அழுத்தமும் இல்லாமல் விளையாடுகிறார். அவருடைய அபாரமான பினிஷிங் மூலமாக 2-3 போட்டிகளில் பெங்களூரு அணியை வெற்றி பெறச் செய்து விட்டார்.

அவர் விளையாடுவதை பார்க்கையில் எனக்கும் தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்கிற ஆசை எழுந்துவிட்டது. இதே ஃபார்மை அவர் தக்க வைத்தால் நிச்சயமாக பெங்களூரு அணி வெற்றிப் பாதையில் நீண்ட தூரம் நோக்கி பயணிக்கும் என்று டிவில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் தினேஷ் கார்த்திக் பொதுவாக அழுத்தமான சவாலான நேரங்களில் விளையாடுவதை பெரிதாக விரும்புவார். நிறைய திறமைகள் அவரிடம் இருக்கின்றது. ஐபிஎல் தொடருக்கு முன்பாக கடைசியாக அவரை நான் இங்கிலாந்தில் பார்த்தேன். அப்பொழுது அவர் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவ்வளவாக அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடமல் இருந்தார்.

டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகள் கூட பங்கேற்காமல் இருந்தார். அவ்வளவுதான் அவருடைய கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூட நான் எண்ணி இருக்கிறேன். ஆனால் அவை அனைத்தையும் தற்பொழுது தினேஷ் கார்த்திக் தன்னுடைய நோக்கம் மற்றும் பேட்டிங் ஆற்றல் மூலம் பொய்யாக்கி விட்டார் என்று ஏபி டிவில்லியர்ஸ் தினேஷ் கார்த்திக் குறித்து பெருமையாக கூறியுள்ளார்.