இந்திய அணியில் இந்த 2 பேரை மாற்றுங்கள் – நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஆகாஷ் சோப்ரா கொடுத்த டிப்ஸ்

0
177
Akash Chopra about Ind vs Nz T20WC

டி20 உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதுவரை உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது கிடையாது என்ற பெருமையுடன் பாகிஸ்தானை இந்தியா சந்தித்தது. ஆனால் இந்திய அணியின் ஆட்டம் அன்று அவ்வளவாக எடுபடவில்லை. டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணியின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. கேப்டன் விராட் கோலி என்னதான் அரைசதம் அடித்தாலும் 151 ரன்கள் மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது.

இதனை சேஸ் செய்த பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இருவருமே அரைசதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் இந்திய அணியின் வீரர்களுக்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அணித் தேர்வு சரியில்லை என்றும் அதில் மாற்றங்கள் அவசியம் என்று பலர் கூறி வந்த நிலையில் தற்போது முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவும் தனது அறிவுரை வழங்கியுள்ளார்.

- Advertisement -

தன்னுடைய யூடியூப் சேனலில் இது குறித்து பேசிய அவர் இந்தியாவில் 5 பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாடினாலும் அவர்களுக்கு சரியானதாக அமைவதில்லை. புவனேஸ்வர் குமார் முன்புபோல பந்தை நன்கு ஸ்விங் செய்வதில்லை. அதே நேரத்தில் முகமது ஷமியும் பல நேரங்களில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடிவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சர்தூல் தாகூரை களமிறக்குவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். ஜடேஜா 4 ஓவர்கள் சிக்கனமாக பந்து வீசினாலும் அவரால் விக்கெட் எடுக்க முடிவதில்லை. ராகுல் சகார் அவருக்கு பதில் களம் காண வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா அதற்கு பதிலாக சார்தூல் தாகூரை எடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவரைத் தனி பந்துவீச்சாளராக அணிக்குள் எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வருண் சக்கரவர்த்தியை ஒரு மோசமான ஆட்டத்துக்காக அணியில் இருந்து நீக்குவது சரியான அணுகுமுறையாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். ஐந்து பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பி அணி களம் இறங்கும் போது ஐந்து வீரர்களும் சிறப்பான வீரர்களாக இருத்தல் அவசியம் என்றும் அதனால்தான் வீரர்களை மாற்றும் படியாகத் தான் கூறுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.