2022 ஐ.பி.எல் ஏலத்தில் ‌அதிக விலைக்கு ஏலம் போகும் வீரர் இவர்தான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
344
Aakash Chopra IPL Auction 2022

ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மெகா ஏலமாக இது நடைபெற உள்ளதால் இது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பலருக்கு இதன் மீது சுவாரசியம் தொற்றிக்கொண்டது. ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதித்து இருந்தது. எந்த வீரர்களை எல்லாம் தக்க வைத்து உள்ளோம் என்ற பட்டியலை ஏற்கனவே 8 அணிகளும் அறிவித்துவிட்டன.

புதிதாக இணைந்த இரண்டு அணிகளும் தலா 3 வீரர்களை ஏலத்திற்கு முன்னதாகவே ஒப்பந்தம் செய்துகொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதித்து இருந்தது. அதையும் இரண்டு அணிகளும் அறிவித்துவிட்டனர். தற்போது மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஏலத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அதிக எதிர்பார்ப்பு உள்ள வீரர்களைக் கொண்ட marquee செட்டை நேற்று ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது.

- Advertisement -

இந்த பட்டியலில் 10 வீரர்கள் உள்ளனர். வார்னர், கம்மின்ஸ், டீகாக், போல்ட், ரபாடா, டூப்ளெசிஸ் என 6 வெளிநாட்டு வீரர்களும் சமி, அஷ்வின், ஸ்ரேயாஸ், தவான் என்ன நான்கு இந்திய வீரர்களும் உள்ளனர். இந்த வீரர்களுக்கு அதிக போட்டி இருக்கும் என்பதால் முதலில் இந்த வீரர்களை தான் ஏலத்தில் விடுவர். இந்த வீடுகளை வாங்குவதற்கு நிச்சயம் அனைத்து அணிளிடம் இருந்தும் கடுமையான போட்டி வெளிப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இந்த லிஸ்டில் அதிக விலைக்கு ஏலம் போகப்போகும் வீரர் யார் என்ற கேள்விக்கு முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலளித்துள்ளார். அவர் பேசும்போது இந்த லிஸ்டில் அதிகபட்ச விலைக்கு இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஏலம் செல்வார் என்று கூறியுள்ளார். மேலும் இஷன் கிஷன் இந்தப் பட்டியலில் இல்லாத காரணத்தினால் நிச்சயம் ஸ்ரேயாஸ் 15 முதல் 16 கோடி ரூபாய் வரைக்கும் செல்வார் என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு தெரிந்த ஒருத்தர் பெங்களூரு அணி ஸ்ரேயாஸ் ஒருவருக்காக 20 கோடி ரூபாயை தனியாக ஒதுக்கி வைத்து உள்ளதாக கூறினார் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இன்னமும் இரண்டு வாரங்களில் ஏறும் நடைபெற உள்ளதால் இப்போது எந்த அணிக்கு எந்த வீரர்கள் தேவை என்பது குறித்த கருத்துக்களை சமூக வலைததளங்களில் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -