உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ள 3 அணிகள் இதுதான் ; நியூசிலாந்துக்கு நிச்சயம் வாய்ப்பு இல்லை – ஆக்காஷ் சோப்ரா உறுதி

0
944
Aakash Chopra Predicts 3 Teams for WTC Finals

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ள 3 அணிகள் குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆக்காஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் சொந்த ஊரில் நடைபெற்ற நியூசிலாந்து & இலங்கை தொடரை கைப்பற்றியுள்ளது.

ஒரே ஒரு சிக்கலான விசியம் என்னவென்றால் தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தது தான். எனினும் இறுதிப் போட்டிக்கு முன் இன்னும் சில ஆட்டங்கள் பாக்கி இருப்பதால் இந்திய அணிக்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக வெற்றியைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

- Advertisement -

ஆக்காஷ் சோப்ரா, “ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் வெல்வது மிகவும் முக்கியம். அது தவிர்த்து இலங்கை அணிக்கு எதிராக 2வது டெஸ்ட்டையும் பங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும். அதை நாம் எளிதாக செய்துவிடுவோம் என்று நம்புகிறேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இழந்து தான் இவ்வளவு சிக்கல்களுக்கும் காரணம் ” என்றார்.

நியூசிலாந்து அணி நிச்சயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறாது

நடப்புச் சாம்பியனான நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாது என்று அடித்துக் கூறியுள்ளார். “ அவர்கள் சொந்த ஊரில் நடந்த பங்களாதேஷ் & தென் ஆப்ரிக்கா தொடரை டிரா செய்துள்ளனர். அடுத்ததாக நடைபெறவிருக்கும் இலங்கை தொடரை முழுமையாக கைப்பற்றினாலும் எந்த பலனும் இல்லை. ஏனென்றால் பாகிஸ்தான் நாட்டில் 3 டெஸ்ட்டும் இங்கிலாந்து நாட்டில் 3 டெஸ்ட்டும் மிச்சம் உள்ளது. அவ்வளவு தான் அவர்களின் ஆட்டம் முடிந்து விட்டது ” என்று ஒரே வாக்கியத்தில் முடித்துக்கொண்டார்.

மேலும் அவர், “ வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளை நாம் கணக்கில் சேர்க்கவில்லை. நியூசிலாந்து அணி உள்ளே வராது. இலங்கை அணி தகுதி பெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆகையால் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தான் தற்போது போட்டி நிலவுகிறது ” என்று கூறினார். அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -