கேஎல் ராகுல் இல்லை என்னைப் பொறுத்தவரை இவர்தான் ஆட்டநாயகன் ஆகாஷ் சோப்ரா கருத்து

0
778
Aakash Chopra and KL Rahul

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று வரை நடந்து வந்தது. பலரும் எதிர்பாராதவிதமாக இந்த ஆட்டத்தை இந்திய அணி வென்றது இறுதிநாள் ஆரம்பிப்பதற்கு முன்பு வரை ஆட்டத்தை தோற்காமல் இருந்தாலே போதும் என்று ரசிகர்கள் இருந்தனர்.ஆனால் ஆட்டத்தில் நடந்த திடீர் திருப்பங்கள் காரணமாக இந்திய அணி இந்த ஆட்டத்தை வென்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியில் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்சில் சதம் கடந்த கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து தற்போதைய வர்ணனையாளர் முன்னாள் வீரருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் போது, என்னைப்பொருத்தவரை கேஎல் ராகுலை விட முகம்மது சுராஜ் தான் ஆட்டநாயகன் விருதுக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கூறியுள்ளார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் முகமது சிராஜ். அதுவும் இறுதியாக நேரத்தில் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்சின் கடைசி ஐந்து விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு திரில் வெற்றி பெற்றுத் தந்தார்.

- Advertisement -
Mohammed Siraj Test

பேட்டிங் வீரர்கள் சதம் கடந்து ஒரு அணியை தோற்க முடியாத நிலைக்குத் தான் கொண்டு செல்ல முடியும். ஆனால் பந்துவீச்சாளர்கள் தான் விக்கெட் எடுத்து வெற்றி வாய்ப்பை வழங்க முடியும் என்று கூறியுள்ளார் சோப்ரா. மேலும் அவர் கூறுகையில் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் ஆனால் அவரது வேகமும் அனுபவமும் 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் போன்று இருக்கிறது என்று கூறியுள்ளார். இதுவரை 7 ஆட்டங்களில் இருபத்தி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சுக்கு புதிய உத்வேகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிராஜ்.

முதல் இன்னிங்சில் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சிராஜ். இரண்டாவது இன்னிங்சிலும் மொயின் அலி இந்தியாவிற்கு தொல்லை கொடுக்கும் போது அவரை அவுட்டாக்கி இந்தியாவை வெற்றி வாய்ப்பை பிரகாச படுத்தினார் மொயீனை அவுட்டாக்கிய அடுத்த பந்தே சாம் குர்ரனை வெளியேற்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் சிராஜ்.

எப்போதெல்லாம் ஆட்டத்தில் இந்தியாவின் சற்று பின்தங்கி ஏதோ அப்போது எல்லாமஅ தேவையான விக்கெட்டுகளை எடுத்து கொடுத்து இந்திய அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு வந்து விட்ட முகமது சிராஜ் தான் எனது ஆட்ட நாயகன் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -