ஐபிஎல்

16 புள்ளிகள் எடுத்தாலும் வெளியேறலாம்.. 15 புள்ளிகள் எடுத்தாலும் தகுதி பெறலாம்.. எல்லா அணிகளுக்கும் பிளே ஆப் கணக்கு போட்ட ஆகாஷ் சோப்ரா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு புள்ளி பட்டியல் பெரும் சவாலான நிலையில் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். தற்போது ஐபிஎல் புள்ளி பட்டியலில் குஜராத் அணி 18 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இதே போல் சிஎஸ்கே அணி 15 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், லக்னோ அணி (15) அதே புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், மும்பை அணி 14 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும் இருக்கிறது. ஆர் சி பி  12 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய ஆணிகள் தற்போது 13 போட்டியில் விளையாடி 12 புள்ளிகளுடன் முறையே ஆறு ஏழு மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கிறது. ஹைதராபாத் மற்றும் டெல்லி அணி ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா 15 புள்ளிகள் பெற்றிருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு போகலாம்.

இல்லையெனில் 16 புள்ளிகள் பெற்ற அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறலாம். இப்படி ஒரு சிறந்த சீசன் ஆகத்தான் நடப்பு ஐபிஎல் தொடர் இருக்கிறது. சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளை பொறுத்தவரை அவர்கள் தங்களுடைய கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடுவார்கள்.

- Advertisement -

ஒருவேளை அவர்கள் தங்களுடைய கடைசி ஆட்டத்தில் தோற்று 15 புள்ளிகளில் இருந்தாலும் மும்பை ஆர் சி பி அணி ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் சிஎஸ்கே லக்னோவா அணிகள் தகுதி பெற்று விடும். ஒருவேளை சிஎஸ்கே லக்னோ அணிகள் தகுதி பெற்றால் நாலாவது இடத்திற்கு 16 புள்ளிகளை பெற்று மும்பை பெங்களூரு ஆகிய அணிகளில் எது அதிக ரன் ரெட்டை பெற்று இருக்கிறதோ அவர்கள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

மேலும் சிஎஸ்கே மற்றும் லக்னோ ஆகிய ஆணிகள் 15 புள்ளிகளில் தங்கி விட்டாலும் அவர்கள் வெளியேறும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது. தற்போது உள்ள சூழல் படி அதிகபட்சமாக மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் 16 புள்ளிகளை பெற முடியும். அப்படி அவர்கள் பெற்றால் மும்பையும் பெங்களூரும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.சிஎஸ்கே,லக்னோ அணியில் யார் அதிக ரன் ரேட் பெற்று இருக்கிறார்களோ அவர்கள் நான்காவது இடத்தை பிடிப்பார்கள்.

Published by