” சென்ற ஆண்டு தோற்ற போது அனைவரும் விராட் கோலி தான் காரணம் என்றனர் ஆனால் ரோஹித்.. ” – ஆகாஷ் சோப்ரா அதிரடி

0
128
Virat Kohli and Aakash Chopra

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக யுஏயில் நடக்கும் தொடரில் இந்திய அணி ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளது. முன்னர் 2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் வீழ்ந்து வெளியேறியது. இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியைச் சந்தித்து மீண்டும் நாக் அவுட் ஆனது.

2021 டி20 உலகக் கோப்பையை விராட் கோலிக்கு கேப்டனாக கடைசி தொடர். மேலும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலமும் இத்துடன் முடிவடைந்தது. தங்களது கடைசி தொடரில் கோப்பையை வெல்ல கோலி & சாஸ்திரி தவறியதால் ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் அவர்களது தோலில் தான் விழுந்தது. அதன் பின்னர் இந்திய அணியில் இரு பெரு மாற்றங்கள். புதிய கேப்டனாக விராட் கோலியை ரோஹித் ஷர்மாவும் ரவி சாஸ்திரியின் இடத்தை ராகுல் டிராவிட்டும் நிரப்பினர்.

- Advertisement -

விராட் கோலி & கோ செய்யத் தவறியதை ரோஹித் ஷர்மா மற்றும் டிராவிட் செய்துக் காட்டுவர் என பலர் நம்பினர். ஆனால் வழக்கம் போல ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் தான். ஆனால் இம்முறை யாரும் கேப்டனை குறை சொன்னவாறு தென்படவில்லை. இதனைத் தொடர்ந்து முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா, உண்மையான தவறு எங்கு நடந்தது என்பதைப் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

தன் யூடியூப் பக்கத்தில் அவர் கூறியதாவது, “ சென்ற ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பிக்காத போது அனைத்தும் கேப்டன் விராட் கோலியால் தான், உடனடியாக கேப்டனை மாற்ற வேண்டும் என பலர் தெரிவித்தனர். ஆனால் தற்போது ரோஹித் ஷர்மாவாலும் அதே இடத்தில் கோப்பையை உயர்த்த இயலவில்லை. இதன் மூலம் தகுதியான அணியை தேர்வு செய்வதில் தான் பிரச்சினை நிலவுகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. கேப்டன்கள் மேல் எந்த தவறும் இல்லை. ”

“ சென்ற ஆண்டு சமீபத்தில் நன்றாக ஆடிய வீரர்களை தேர்வு செய்து சாஹலை அணியை விட்டு நீக்கினார். அடுத்து திடீரென இஷான் கிஷனை துவக்க வீரராக ஆட வைத்தனர். மீண்டும் அதே தவறைத் தான் செய்கின்றனர். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்டை ஒப்பனிங் ஸ்பாட்டில் மாற்றி மாற்றி ஆட வைக்கின்றனர் மற்றும் பினிஷர் தினேஷ் கார்த்திக் அணியில் காணவில்லை. மேலும் வெறும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்கின்றனர். ” என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஆகாஷ் சோப்ரா.

- Advertisement -

மேலும், “ விக்கெட்டுகள் கைபற்றக் கூடிய பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், அக்ஷர் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோரை அணியில் சேர்ப்பது அவசியம். தீபக் ஹூடாவிற்கு பந்துவீச வாய்ப்பு அளிக்கப் போவதில்லை என்றால் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடிக்க வேண்டும். எதிரணியைப் பார்த்து பல மாற்றங்களைச் செய்கிறோம். இந்திய அணியில் திட்டமிடுதலில் பற்றாக்குறை. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தேவையான மாற்றங்களைச் செய்ததால் இறுதிப் போட்டியில் நிற்கின்றனர். ” என்றார்.