ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்திருக்கிறார் டேவிட் வார்னர். மேலும் விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோரின் சாதனையையும் முறியடித்திருக்கிறார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெற்றது. போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 200 ரன்கள் இலக்கை வைத்தது ராஜஸ்தான் அணி.
இதனை கடக்க முடியாமல் 57 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது டெல்லி அணி. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 3 லீக் போட்டிகளில் மூன்றையும் இழந்து புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருக்கிறது.
இருப்பினும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, கேப்டன் டேவிட் வார்னர் அரைசதம் அடித்தார். இவர் 55 பந்துகளில் 65 ரன்கள் அடித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் டேவிட் வார்னர் அடிக்கும் 61ஆவது 50+ ஸ்கோர் இதுவாகும். 4 சதங்கள் 57 அரைசதங்கள் அடித்திருக்கிறார்.
ராஜஸ்தான் அணிக்கெதிரான லீக் போட்டியில் 26 ரன்களை கடந்தபோது, ஐபிஎல் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் மைல்கல்லை கடந்து புதிய சாதனையும் படைத்திருக்கிறார்
டேவிட் வார்னர், பிஎல் கிரிக்கெட்டில் 6000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் மற்றும் முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அது மட்டுமல்லாது அதிவேகமாக 6000 ரன்களை கடந்த வீரர் என்னும் சாதனையை படைத்தார்.
டேவிட் வார்னர் இதுவரை 165 போட்டிகள் விளையாடி, 6039 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது சராசரி 42.23 ஆகும். இவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 140 ஆகும்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்
- விராட் கோலி – 6727 ரன்கள் – 225 இன்னிங்ஸ்
- ஷிகர் தவான் – 6370 ரன்கள் – 208 இன்னிங்ஸ்
- டேவிட் வார்னர் – 6039 ரன்கள் – 165 இன்னிங்ஸ்
- ரோகித் சர்மா – 5893 ரன்கள் – 229 இன்னிங்ஸ்






