டி20 கிரிக்கெட் வரலாற்றில் இனி யாரும் செய்ய முடியாத சாதனை.. ரோகித் சர்மா புது ரெக்கார்ட்

0
163
Rohit

இந்திய கிரிக்கெட்டில் ஏராளமான வீரர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். தற்காலத்தில் கிரிக்கெட்டில் பெரிய அளவில் வீரர்களை உருவாக்கும் தொழிற்சாலையாக இந்தியா விளங்கி வருகிறது.

இதில் சில வீரர்கள் மட்டுமே தங்களுடைய பெயரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எழுதி விட்டு செல்கிறார்கள். அதிலும் சில வீரர்கள் மட்டுமே உலக கிரிக்கெட்டில் தங்களது பெயரை பதிவு செய்கிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் இந்திய கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட்டில் தன்னுடைய பெயரை அழுத்தமாகப் பதிவு செய்த வீரராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உருவெடுத்திருக்கிறார்.

ஏற்கனவே அவர் பெயரில் சில பல பெரிய சாதனைகள் பதிவாகி இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், சர்வதேச டி20 போட்டியில் முதல் 100 வெற்றிகளை பார்த்த முதல் வீரர் என்கின்ற அரிய சாதனைக்கு சொந்தக்காரரானார்.

ரோகித் சர்மா 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். தற்பொழுது அவருடைய சர்வதேச டி20 கிரிக்கெட் அனுபவம் 17 ஆண்டுகள்.

- Advertisement -

இதன் மூலம் 100 சர்வதேச t20 வெற்றிகளை கண்ட முதல் வீரர் என்ற அரிய சாதனை படைத்த அடுத்த போட்டியில், அதாவது இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், மேலும் யாரும் உடைக்க முடியாத ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறார்.

அது என்ன சாதனை என்றால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 போட்டிகளை விளையாடும் முதல் வீரர் என்கின்ற சாதனையை பதிவு செய்திருக்கிறார். இனி இச்சாதனையை உலகக் கிரிக்கெட்டில் யாரும் உடைக்க போவதில்லை. இதைத் தாண்டி யாராவது 200 வது போட்டியை விளையாடும் பொழுது அது சாதனையாகப் பதிவாகும்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டி20 தொடரின் மூலமாக தற்போது இரண்டு அரிய சர்வதேச டி20 சாதனைகளுக்கு ரோகித் சர்மா உரிமையாளராக மாறியிருக்கிறார். மேலும் மூன்றாவது போட்டியை அவர் வெல்லும் பொழுது, கேப்டனாக அதிக சர்வதேச டி20 போட்டியை வென்றவர் என்கின்ற அரிய சாதனையையும் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதல் 150 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரராகவும், முதல் 150 ஒருநாள் போட்டிகளை விளையாடிய வீரராகவும், இங்கிலாந்தின் லெஜெண்ட் வீரர் ஆலன் பார்டர் இருக்கிறார். தற்போது இந்த வகையில் டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு ரோகித் சர்மா இருக்கிறார்.