இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 121 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ரோகித் சர்மா வென்றார். மேலும் இந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு அவர் மனம் திறந்து நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார்.
மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்த போட்டியில் சேர்ந்து ஆட்டம் இழக்காமல் 169 பந்தில் 168 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இத்துடன் கடைசி வரை களத்தில் நின்று போட்டியையும் முடித்து வைத்தார்கள்.
விராட்டுக்கும் எனக்கும் ஒரே உணர்வு
இதுகுறித்து ரோகித் சர்மா பேசும்பொழுது “நான் எப்பொழுதும் ஆஸ்திரேலியா வருவதை விரும்பி இருக்கிறேன். மேலும் சிட்னி மைதானத்தில் நான் கிரிக்கெட் விளையாட மிகவும் விரும்பி இருக்கிறேன். 2008 ஆம் ஆண்டு எனது முதல் சுற்று பயணம் எங்கு அமைந்தது. இன்று அது மீண்டும் எனக்கு நினைவுகளாக வருகிறது. நாங்கள் மீண்டும் இங்கே விளையாட வருவோமா என்று தெரியாது. எனவே ஒரு வீரராக ரசித்து விளையாடினேன்”
” பல ஆண்டுகளாக நாங்கள் பெற்று வந்த பாராட்டுகளை எல்லாம் கடந்து, கிரிக்கெட் விளையாடுவதில் எப்பொழுதும் நாங்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தோம். 15 வருடங்களாக என்ன நடந்தது என்பதை மறந்து விடலாம். நான் எப்பொழுதும் இங்கு விளையாடுவதை விரும்பி இருக்கிறேன். விராட் கோலிக்கும் இதே போன்ற உணர்வுதான் இருக்கும்”
எங்களுக்கு நடந்ததை கொடுத்தோம்
“நான் நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்தேன். ஆனால் இங்கு வந்து விளையாடுவதற்கு தேவையான அளவு நான் தயாராகி இருந்தேன். மேலும் தொடரை வெல்ல முடியாவிட்டாலும் நேர்மறையான சில விஷயங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. எங்களிடம் தற்போது ஆஸ்திரேலியா வந்து விளையாடி அனுபவம் பெறாத பல இளம் வீரர்கள் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : இத்தனை வருஷம் கிரிக்கெட் ஆடினாலும் ஒரே ஒரு ரன் சோதிக்குது.. ரோகித் கூட 2013 சம்பவம் ஞாபகத்துக்கு வருது – விராட் கோலி பேச்சு
“நாங்கள் இங்கு முதலில் வந்த பொழுது எங்களுக்கு மூத்த வீரர்கள் சிறப்பாக வழி காட்டினார்கள். தற்போது நாங்கள் எங்களுடைய இளம் வீரர்களுக்கு எங்கள் அனுபவத்தை திருப்பிக் கொடுக்கிறோம். நான் செய்கிறேனோ அதை மிகவும் பிரியத்துடன் செய்கிறேன். இதைத் தொடர முடியும்” என நம்புகிறேன் என கூறியிருக்கிறார்






