93 ரன்.. உலக சாம்பியன் தெஆ-வை வீழ்த்திய பாகிஸ்தான்.. புள்ளி பட்டியலில் மாஸ்.. இந்திய அணிக்கு சாதகம்

0
178
Pakistan

கராச்சி கடாபி மைதானத்தில் நடைபெற்று வந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளி பட்டியலில் உச்சத்திற்கு சென்று இருக்கிறது.

தற்போது தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 378 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் மற்றும் சல்மான் அலி ஆகா தலா 93 ரன் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி ஆறு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

சுருண்ட இரண்டு அணிகள்

இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் டோனி டி சோர்சி 104 ரன்கள் எடுக்க 269 ரன்கள் எடுத்து சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் 42 ரன்கள் எடுக்க அந்த அணி 167 ரன்கள் எடுத்து சுருண்டது. தென் ஆப்பிரிக்க தரப்பில் முத்துசாமி மீண்டும் 5 விக்கெட் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து 278 ரன்கள் இலக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி அபாரம்

இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியால் இறுதியில் 183 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணிக்கு டிவால்ட் பிரிவிஸ் அதிரடியாக 54 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் ரோமன் அலி மற்றும் ஷாகின் அப்ரிடி இருவரும் தலா நான்கு விக்கெட் வீழ்த்தினார்கள். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தென் ஆப்பிரிக்கா அணியை 93 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்கு.. பிராட்மேன் கூட கம்பேரிசன் வருது – ஏபி டிவில்லியர்ஸ் கவலை

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன் ஆக இருந்து வரும் தென் ஆப்பிரிக்க அணியை பாகிஸ்தான் வீழ்த்தி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. முதல் இடத்தில் மூன்று போட்டியில் மூன்றை வென்று ஆஸ்திரேலியா இருக்கிறது. தற்போது தன்னுடைய விளையாடிய ஒரு போட்டியில் வென்று பாகிஸ்தான் 100 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு தென் ஆப்பிரிக்கா அணி சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும். இந்த நிலையில் பலவிதமான பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணிக்கு சாதகமானதாக அமைகிறது!

- Advertisement -