செலெக்டர்ஸை பார்த்து வீரர்கள் பயப்படனுமா?.. உடனடியா தேர்வுக்குழுவுல இந்த மாற்றத்தை கொண்டு வரணும் – ரகானே வலியுறுத்தல்

0
50
Rahane

இந்தியத் தேர்வுக்குழுவுக்கு தேர்வாளர்களை கொண்டு வரும் விதிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ரகானே கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பல ஆண்டுகள் ஆன வீரர்களுக்கு இந்திய தேர்வுக்குழுவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் தேர்வு குழுவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்குழுவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரகானே மாற்றத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

- Advertisement -

ரகானே புஜாரா கிரிக்கெட் முடிவு

அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு ரகானே மற்றும் புஜாரா இருவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து வைத்ததில் மிக முக்கிய பங்கை கொண்டு இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முக்கிய வீரர்கள் இல்லாத போதும் கூட ரகானே மற்றும் புஜாராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மாறாக இளம் வீரர்களையே தொடர்ந்து தேர்வு செய்தார்கள்.

தற்போதைய தேர்வுக் குழு மிகவும் கண்டிப்புடன் இருந்து வருகிறது. இதனால் முகமது ஷமி மாதிரியான வீரர்களுக்கு அதிருப்தி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. எந்தவித சர்ச்சையும் ஏற்பட்டு விடக்கூடாது என தான் அமைதியாக இருப்பதாக முகமது ஷமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வீரர்கள் பயப்படக்கூடாது

இதுகுறித்து ரகானே பேசும்பொழுது “வீரர்கள் தேர்வாளர்களை பார்த்து பயப்படக்கூடாது. குறிப்பாக உள்நாட்டு கிரிக்கெட் தேர்வாளர்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். இந்தத் தேர்வு குழுவில் சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற்று 5 முதல் 7, 8 ஆண்டு ஆனவர்கள் இடம் பெறுவது முக்கியம்”

இதையும் படிங்க : விராட் கோலி அப்பவே சொன்னதை பிசிசிஐ செய்யணும்.. இல்லனா இந்தியாவுல டெஸ்ட் கிரிக்கெட் அழியும் – அஸ்வின் கருத்து

“கிரிக்கெட் வளர்ந்து வரும் வேகத்திற்கு தேர்வாளர்கள் மனநிலையும் அதனுடன் பொருந்தி போகும் வகையில் இருக்க வேண்டும். தேர்வாளர்கள் சமீபத்திய கிரிக்கெட் உடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும். 20, 30 வருடங்களுக்கு முன்பு இருந்த கிரிக்கெட்டை வைத்து சிந்திப்பவர்களாக இருக்கக் கூடாது. இதன் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு தேர்வுக் குழுவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.

- Advertisement -